26th January 2010 - Tuesday
ஜனவரி மாதம் 26-ம் தேதி – செவ்வாய் கிழமை
அவர் மேல் விழுந்த ஆக்கினை
நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன் தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார். - (ஏசாயா 53:5-6).
ஜோ என்பவர், கவர்னரின் தனிப்பட்ட ஆலோசகராக இருந்தார். கவர்னர் தன்னுடைய எல்லா காரியத்திலும் அவருடைய ஆலோசனையை கேட்காமல் ஒன்றையும் செய்ய மாட்டார். கவர்னரின் சிறந்த நண்பராக ஜோ இருந்தார். ஒரு நாள் திடீரென்று ஜோ தன் நித்திரையில் மரித்து போனார்.
அவர் மரித்த செய்தியை கேட்டவுடனே, அநேகர் கவர்னரிடம் வந்து, தங்களுக்கு அந்த பதவியை தரும்படி வேண்டிக்கொண்டனர். ஆனால் யாருக்கும் அந்த பதவியை கவர்னர் தரவில்லை. அவர் சொன்னார், 'இந்த மனிதர்களால் அந்த மனிதரின் உடலை அடக்கம் பண்ணுகிற வரைக்கூட காத்திருக்க முடியவில்லை. அதற்குள் தங்களுக்கு அந்த பதவி வேண்டும் என்று கேட்கிறார்களே' என்று வேதனைப்பட்டார்.
கல்லறையில் அவரை அடக்கம் பண்ணிவிட்டு, வரும் வழியில் ஒரு மனிதர் அவரிடம் ஓடி வந்து, 'ஐயா, ஜோ இருந்த இடத்திற்கு நான் வருவதற்கு ஏதாவது வழி உண்டா?' என்று கேட்டார். உடனே கவர்னர், 'ஓ இருக்கிறதே, சீக்கிரம் போங்கள், அந்த கல்லறை வெட்டியான், அந்த குழியை சீக்கிரம் மூடப் போகிறான்' என்று கூறினார்.
நம்மை சுற்றி இருக்கிற மக்கள் அநேகர், 'அவள் அல்லது அவன் இருக்கிற இடத்தில் நான் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்' என்று எத்தனையோ முறை சொல்வதை கேட்டிருக்கிறோம். ஆனால் மரிக்கும் ஒருவரின் அல்லது மரித்த ஒருவரின் இடத்தில் நாம் இருப்பதை விரும்பமாட்டோம். இங்குதான் தேவனின் அன்பு நம்மிடத்தில் வெளிப்படுகிறது. நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறது அரிதுளூ நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான். நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல்வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார் (ரோமர் 5:7-8).
பாவத்தில் மரித்த நம்மை, நம் பாவத்தினிமித்தம் நாம் படவேண்டிய பாடுகளை கிறிஸ்து நமக்காக பட்டு, நாம் இருக்கவேண்டிய இடத்தில் அவர் நமக்காக மரித்ததினாலே தேவன் நம்மேல்வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார். அல்லேலூயா!
நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன் தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்.
மட்டுமல்ல, இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம். (குமாரனாகிய) அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது (கொலோசெயர்1:13-14).
நரகாக்கினையிலிருந்து நம்மை மீட்டு, நாம் அனுபவிக்க வேண்டிய பாடுகளை தாம் சுமந்து, நம் பாவங்களை மன்னித்து, நம்மை இரட்சித்து மீட்ட அன்பின் குமாரனாகிய இயேசுகிறிஸ்துவுக்கு கோடி ஸ்தோத்திரம் உண்டாவதாக. நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல்வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார். அந்த பரிசுத்தமுள்ள தேவனுக்கு நன்றியாக நாம் என்றென்றும் ஜீவிப்போமா?
என்மேல் பாராட்டின உமதன்புக்
கீடாய் என்ன நான் செய்திடுவேன்
நரகாக் கினையின் நின்று மீட்ட
சுத்த கிருபையை நித்தம் பாடுவேன்
மாபாவியாம் என்னை நினைக்க
மண்ணான நான் எம்மாத்திரம் ஐயா!
தேவதூதரிலும் மகிபனாய் என்னை
மாற்றிய அன்பை துதிப்பேன்
ஜெபம்: எங்களை அதிகமாய் நேசித்ததினால், நாங்கள் பாவிகளாய் இருக்கையில் கிறிஸ்து எங்களுக்காக மரித்ததினால் நீர் எங்கள் மேல் வைத்த அன்பை விளங்க பண்ணுகிற தயவிற்காக உமக்கு கோடி ஸ்தோத்திரங்கள். நாங்கள் படவேண்டிய ஆக்கினைக்கு எங்களை தப்புவித்து, எங்களுடைய இடத்தில் கிறிஸ்து எங்கள் ஆக்கினையை தம் மேல் சுமந்து எங்களை மன்னித்த தயவை நினைத்து உம்மை துதிக்கிறோம். அந்த நன்றியை என்றும் மறவாதவர்களாக நாங்கள் உமக்கென்று சாட்சிகளாக ஜீவிக்க கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.
கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு
Send all your Query / Reply to :
anudhinamanna@gmail.com
Wednesday, January 27, 2010
Paraloegamey Nam Sondhamey * - 24-01-2010 - Sunday
24th January 2010 - Sunday
ஜனவரி மாதம் 24-ம் தேதி – ஞாயிற்று கிழமை
பரலோகமே நம் சொந்தமே
என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன். - (யோவான் 14:2-3).
ஒரு வயதான கணவனும் மனைவியும் திருமணமாகி 55 வருடங்கள் கழிந்து, ஒரு நாள் ஒரு காரில் செல்லும்போது, விபத்தில் சிக்கி அந்த இடத்திலேயே மரித்து போனார்கள். கடைசி பத்து வருடங்கள் மனைவி இருவருடைய உடல்நிலை குறித்து மிகுந்த சிரத்தை எடுத்தபடியினால், இருவரும் நல்ல சுகத்துடன் இருந்தனர்.
அவர்கள் மரித்து பரலோகம் சென்றவுடன், பரிசுத்த பேதுரு அவர்களை அவர்களுடைய வாசஸ்தலத்திற்கு கூட்டிக்கொண்டு போனார். அங்கு ஒரு பெரிய சமையலறை, பெரிய புதிய மாடலில் கட்டப்பட்ட அறைகள் எல்லாவற்றையும் காட்டியவுடன் கணவர் மிகுந்த ஆச்சரியப்பட்டு, அது எவ்வளவு விலையாகும் என்று கேட்டார். அப்போது பரி.பேதுரு, 'இது பரலோகம், எல்லாமே இலவசம்' என்றார். பின்னர், அவர் அவர்களை சாப்பிடும் இடத்திற்க்கு கூட்டி சென்றபோது, அந்த கணவர் அங்கிருந்த உணவு வகைகளை பார்த்துவிட்டு, 'நான் எவ்வளவு சாப்பிடலாம்' என்று கேட்டார், அப்போது பரி.பேதுரு, 'நான் தான் சொன்னேனே, இது பரலோகம், எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம், கணக்கே இல்லை' என்று கூறினார். அப்போது அந்த கணவர், 'கொலஸ்ட்ரால் மாத்திரை, சர்க்கரை மாத்திரை இங்கு உண்டா?' என்று கேட்டார். அப்போது பரி.பேதுரு, 'இங்கு சாப்பிட்டால் உடலும் பெருக்காது, கொலஸ்ட்ராலும் பெருகாது, எந்த வியாதியும வராது' என்று கூறினார்.
அதை கேட்ட கணவர், மிகவும் கோபமுற்றவராக, தன் தலையில் இருந்த தொப்பியை கீழே போட்டு, மிதித்து, காலை தரையில் ஓங்கி அடித்தார். அப்போது பரி.பேதுருவும் மனைவியும் அவரை சாந்தப்படுத்தி 'என்ன என்னவாயிற்று' என்று கேட்டபோது, அவர் கோபமாக, தன் மனைவியை பார்த்து, 'எல்லாம் உன்னால் வந்தது, நீ மட்டும் அந்த சாலட்டையும், கொழுப்பு சக்தியில்லாத (Fat Free Food) உணவையும் கொடுக்காதிருந்தால், பத்து வருடத்திற்க்கு முன்பே நான் இங்கு வந்து எல்லாவற்றையும் அனுபவித்திருப்பேன்' என்று கூறினார்.
நாம் மாத்திரம் பின்னால் வரப் போகும் சுதந்திரத்தை அறிந்திருந்தால் இப்போது நடக்கும் எந்த காரியத்தை குறித்தும் கவலைப்பட மாட்டோம். ஆனால் நாம் காண்கின்ற காரியங்கள்தான் நிரந்தரம் என்று நினைத்து அவைகளையே உறுதியாய் பற்றி கொண்டிருப்பதால், கர்த்தர் நமக்காக வைத்திருக்கும் பல அரிய காரியங்களை அறியாமல் இருக்கிறோம்.
'நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்' என்று இயேசுகிறிஸ்து வாக்குதத்தம் பண்ணிவிட்டு சென்றிருக்கிறார். நாம் எண்ணுவதற்கும் நினைப்பதற்கும் மேலான இடம் நமக்கென்று வைக்கப்பட்டடிருப்பதை நாம் உணர்வதில்லை.
'அவர், இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே, அழியாததும் மாசற்றதும் வாடாததுமாகிய சுதந்தரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார். கடைசிக்காலத்திலே வெளிப்பட ஆயத்தமாக்கப்பட்டிருக்கிற இரட்சிப்புக்கு ஏதுவாக விசுவாசத்தைக்கொண்டு தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிற உங்களுக்கு அந்தச் சுதந்திரம் பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது' - (1 பேதுரு 1:4,5)
இந்த உலகத்தின் ஆஸ்திகள், சொத்துபத்துக்கள் எல்லாம் ஒரு நாள் அழிந்து போகிறதாக இருக்கிறது. ஆனால் நமக்கென்று ஆயத்தமாக்கப்பட்டடிருக்கிற அந்த பரலோக பவீட்டிலே நம்முடைய சுதந்திரம் அழியாததாக, மாசற்றதாக எப்பொதும் நித்திய நித்தியமாக சந்தோஷமாய் நாம் வாழும்படியாக நமக்கென்று வைக்கப்பட்டிருக்கிறது.
பரலோகத்தை குறித்து நாம் பேசினால் பேசி கொண்டே போகலாம். அந்த அற்புத பரலோகத்தின் ஒரு சிறு பகுதியை நாம் வெளிப்படுத்தின விசேஷம் 21ம் அதிகாரத்தில் காணலாம். 'நகரத்திற்கு வெளிச்சங்கொடுக்கச் சூரியனும் சந்திரனும் அதற்கு வேண்டுவதில்லை; தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது, ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு. இரட்சிக்கப்படுகிற ஜனங்கள் அதின் வெளிச்சத்திலே நடப்பார்கள். பூமியின் ராஜாக்கள் தங்கள் மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள். அங்கே இராக்காலம் இல்லாதபடியால், அதின் வாசல்கள் பகலில் அடைக்கப்படுவதே இல்லை' - (வெளி 21:23-25). அங்கு வியாதி இல்லை, கண்ணீர் இல்லை, மரணம் இல்லை, துன்பம் இல்லை, துயரம் இல்லை, மரணம் இல்லை, பசி இல்லை, பாவம் இல்லை, ஜாதி மத பேதம் இல்லை, குழப்பம் இல்லை. நம் தேவாதிதேவன் அங்கு இராஜாதி இராஜாவாய் வீற்றிருப்பார். நாம் அவரை தரிசித்தவர்களாக, அவரை துதித்து துதித்து, நித்திய நித்தியமாய் அவருடன் வாழுவோம். ஆமென் அல்லேலூயா!
அதிசயமான ஒளிமய நாடாம்
நேசரின் நாடாம்
நாம் வாஞ்சிக்கும் நாடாம்
பிரச்சனை ஏதும் இல்லை
வீண் குழப்பங்கள் ஒன்றும் இல்லை
மொழி நிறம் ஜாதி பற்று உடையோர்
எவருமே அங்கு இல்லை – அன்பே மொழி
ஜெபம்: எங்களை நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, உம்மை துதிக்கிறோம் நீர் எங்களுக்காக ஆயத்தப்படுத்தியவைகளை கண்கள் காணவுமில்லை, காதுகள் கேட்கவுமில்லை. அத்தனை அற்புதமான இடத்தை எங்களுக்காக ஆயத்தம் பண்ணியிருக்கிற உம்முடைய அன்பிற்காக நன்றி தகப்பனே. அங்கு நாங்கள் வந்து வாழும்படியாக எங்கள் வாழ்க்கை அதற்கேற்ற தகுதியுள்ளதாக இருக்கும்படியாக எங்களை ஆயத்தப்படுத்தும். அந்த அற்புத பரலோகத்தை எங்களுடைய சுதந்தரமாக நீர் கொடுக்கப்போகிறதற்காக உமக்கு ஸ்தோத்திரம். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

Friday, January 22, 2010
* Neeingal Visheyshithavargal * - 22-01-2010 - Friday
22nd January 2010 - Friday
ஜனவரி மாதம் 22-ம் தேதி – வெள்ளி கிழமை
நீங்கள் விசேஷித்தவர்கள்
அப்பொழுது ராஜா: தேவன்நிமித்தம் நான் சவுலினுடைய குடும்பத்தாருக்குத் தயைசெய்யும்படி யாதொருவன் இன்னும் மீதியாயிருக்கிறானா என்று கேட்டதற்கு, சீபா ராஜாவைப் பார்த்து: இன்னும் யோனத்தானுக்கு இரண்டு கால்களும் முடமான ஒரு குமாரன் இருக்கிறான் என்றான்.. ராஜ குமாரரில் ஒருவனைப்போல, மேவிபோசேத் என் பந்தியிலே அசனம் பண்ணுவான் என்று ராஜா சொன்னான். - (2சாமுவேல் 3,11).
அநேக வருடங்களுக்கு பிறகு தன் மனைவி கர்ப்பவதியானது குறித்து ஒரு கம்பெனியில் வேலை செய்யும் ஒரு மனிதர் மிகவும் சந்தோஷப்பட்டார். அவர் தன் கூட வேலை செய்யும் சக ஊழியர்களிடம், 'என் மனைவி கர்ப்பம் தரித்திரிக்கிறாள். கர்த்தர் எங்கள் ஜெபத்தை கேட்டார்' என்று சந்தோஷத்தோடு சொன்னபோது, ஒரு சிலர் 'தேவனிடம் பிள்ளையை கேட்டீரோ' என்று அவரை பரிகசித்தனர்.
பிள்ளை பிறந்தபோது, அந்த பிள்ளைக்கு Down Syndrome என்னும் பிறப்பிலேயே காணப்படும் குறை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த தகப்பன், தன் விடுமுறை கழிந்து முதலாம் நாள் வேலையில் சேர்ந்துபோது, எப்படி தன் கூட வேலை செய்பவர்களை சந்திப்பது? கர்த்தரிடம் கேட்டு பெற்று கொண்ட பிள்ளையாயிற்றே, ஆனால் இப்படி குறையோடு பிற்நததை குறித்து கேலி செய்வார்களே என்று நினைத்தவராக, கர்த்தாவே எனக்கு அவர்களுக்கு பதில் சொல்ல நல்ல ஞானத்தை தாரும் என்று ஜெபித்தபடி தன் வேலையில் சேர்ந்தார். அவர் நினைத்தபடியே, ஒருவர் அவரிடம் வந்து, 'உனக்கு ஆண்டவர் இப்படிப்பட்ட பிள்ளையைதான் கொடுத்தாரா' என்று கிண்டலாக கேட்டார். அப்போது என்ன பதில் சொல்வது என்று திகைத்தவராக ஒரு சில நிமிடம் மௌனமாக ஜெபித்த அவர், பின் தைரியமாக, 'நல்லவேளை உனக்கு அப்படிப்பட்ட பிள்ளையை தேவன் கொடுக்காமல், எனக்கு கொடுத்ததற்காக தேவனை துதிக்கிறேன்' என்று கூறினார். இது உண்மையில் நடந்த சம்பவம்.
எப்படி அந்த மனிதர் குறையுள்ள அந்த பிள்ளையையும் தேவனிடமிருந்த பெற்ற ஈவு என்று எண்ணினாரோ அதைப்போல தாவீது இராஜாவும், இரண்டு காலும் முடமான சவுலின் பேரனாகிய மேவிபோசேத்துக்கு இரக்கம் காட்டுவதை பெரிதாக எண்ணினார். சிலர் மேவிபோசேத் முடமானவன்தானே என்று குறைவாக நினைத்திருக்கலாம். ஆனால், தாவீதோ அவரையும் ஒரு மனிதனாக, அவருடைய வாழ்க்கையையும் பெரிதாக மதித்தார்.
ஒருவேளை நம்முடைய சரீர உறுப்புகளிலும் சில குறைகள் இருக்கலாம். சிலர் நான் அழகாகவே இல்லையே என்று நினைக்கலாம், சிலர் நான் கறுப்பாக இருக்கிறேனே எனறு நினைக்கலாம், சிலர் எனக்கு இந்த குறை இருக்கிறதே என்று வருத்தப்படலாம். ஆனால் நாம் எல்லாருமே கர்த்தருடைய பார்வையில் விலையேறப்பெற்றவர்கள் என்பதை நாம் மறக்க கூடாது. 'நீ என் பார்வைக்கு அருமையானபடியினால் கனம்பெற்றாய்; நானும் உன்னைச் சிநேகித்தேன்' (ஏசாயா 43:4) என்று கர்த்தர் உங்களையும் என்னையும் பார்த்து கூறுகிறார். நாம் கர்த்தருடைய பார்வையில் அருமையானவர்களாக இருக்கிறோம். ஏனெனில் அவர் தம்முடைய சொந்த குமாரனை நமக்காக தந்தருளி அவருடைய விலையேறப்பெற்ற இரத்தத்தினால் நம்மை கழுவி விட்டபடியால் நாம் விசேஷித்தவர்கள். நாம் அருமையானவர்கள். நாம் கனம் பெற்றவர்கள். உலகத்தின் பார்வையில் நாம் கனவீனமுள்ளவர்களாக ஒருவேளை இருக்கலாம். ஆனால் கர்த்தரின் பார்வையில் நாம் மிகவும் விலையேறப்பெற்றவர்கள்.
மட்டுமல்ல, மோசே கர்த்தரை நோக்கி, நீர் எங்களை விலையேற பெற்றவர்கள் அல்லது விசேஷித்தவர்கள் என்று வைத்திருப்பது மற்ற ஜனங்களுக்கு எதினால் தெரியவரும்? 'எனக்கும் உமது ஜனங்களுக்கும் உம்முடைய கண்களிலே கிருபை கிடைத்ததென்பது எதினால் அறியப்படும்; நீர் எங்களோடே வருவதினால் அல்லவா? இப்படியே பூமியின்மேலுள்ள ஜனங்கள் எல்லாரிலும், நானும் உம்முடைய ஜனங்களும் விசேஷித்தவர்கள் என்று விளங்கும் என்றான். அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ சொன்ன இந்த வார்த்தையின்படியே செய்வேன்; என் கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது; உன்னைப் பேர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன்' என்றார் (யாத்திராகமம் 33:16-17). ஆம் நம் தேவன் நம்மோடு எப்போதும் இருப்பதினால், நாம் செல்லும் இடமெங்கும் (பாவ இடங்களுக்கு அல்ல, கர்த்தருடைய வேலையாக அல்லது நம் வேலையாக செல்லுமிடமெங்கும்) நம்மோடு கூட வருவதினால் நாம் எப்போதும் விசேஷித்தவர்களாக இருக்கிறோம். நம் தேவன் நம்மோடு இருப்பதினால் நம் மேலதிகாரிகள் கண்களில் தயவு கிடைக்கும்படியாக செய்கிறார். வேலையில் ஞானத்தை தந்தருளுகிறார். மற்றவர்களை பார்க்கிலும் ஞானத்திலும், சுறுசுறுப்பிலும், எல்லா முயற்சிகளிலும் வெற்றியை தருகிறார். கிறிஸ்தவர்கள் என்னும் கூட்டம் மிகச்சிறியதாக இருந்தாலும் அவர்கள் அன்புள்ளவர்கள், அவர்கள் கரிசனையுள்ளவர்கள், அவர்கள் உண்மையுள்ளவர்கள் என்பது உலகத்திலுள்ள யாவருக்கும் தெரிந்திருக்கிறது. இதிலிருந்து நாம் விசேஷித்தவர்கள் என்பது விளங்குகிறதல்லவா?
நாம் மற்றவர்களை பார்க்கும்போதும் கர்த்தர் அந்த மனிதரையம் தம்முடைய சாயலில் உருவாக்கியிருக்கிறார் என்பதை நினைத்து மற்றவர்களை குறைவாக எண்ணக்கூடாது. தேவன் அவர்களை குறைவாக எண்ணாதபோது, நாம் மற்றவர்களை குறைவாக எண்ணுவது எப்படி? ஆகவே நாம் கர்த்தருடைய பார்வையில் விசேஷித்தவர்கள் என்பதை நினைவு கூர்ந்து அவரை எப்போதும் துதிக்ககடவோம். ஆமென் அல்லேலூயா!
தேவா நான் எதினால் விசேஷித்தவன்?
இராஜா நான் அதை தினம் யோசிப்பவன்
எதினால் அது எதினால்
நீர் என்னோடு வருவதினால்
நீர் என்னோடு இருப்பதினால்
ஜெபம்: எங்களை விசேஷித்தவர்களாக மாற்றி உம்முடைய பார்வையில் விலையேறப்பெற்றவர்களாக மாற்றியிருக்கிற எங்கள் அருமை தகப்பனே, உம்மை துதிக்கிறோம். கிறிஸ்துவை ஏற்றுகொண்டு, அவரில் வாழ்கிற யாவரும் விசேஷித்தவர்களாக இருப்பதற்காக உமக்கு ஸ்தோத்திரம். உலகத்தின் பார்வையில் நாங்கள் குறைவாக எண்ணப்பட்டாலும் உம்முடைய பார்வையில் விலையேறப்பபெற்றவர்களாக இருப்பதற்காக உமக்கு ஸ்தோத்திரம். எங்கள் குறைகளை நீர் எண்ணாதபடி எங்களோடு எப்போதும் இருக்கிறபடியினால், எப்போதும் கூட வருகிறபடியினால் உமக்கு நன்றி. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

* Orey Irudhaiyamum Orey Manamum - 21-01-2010 -Thursday
21st January 2010 - Thursday
ஜனவரி மாதம் 21-ம் தேதி – வியாழன் கிழமை
ஒரே இருதயமும் ஒரே மனமும்
அவர்கள் ஜெபம்பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது, அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினால் நிரப்பப்பட்டு, தேவவசனத்தைத் தைரியமாய்ச் சொன்னார்கள். விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுமுள்ளவர்களாயிருந்தார்கள்.
- (அப்போஸ்தலர் 4:31-32).
நாம் எல்லோரும் வெட்டுக்கிளிகளை பார்த்திருக்கிறோம். அது தனியாக தாவி தாவி வரும்போது அதனால் யாரும் பயப்படுவதில்லை. அதில் எந்த முக்கியத்துவமும் இல்லை. ஆனால் அதுவே ஒரு முழு படையாக வரும்போது, வழியில் காணப்படும் எந்தவிதமான பச்சையான இலைகளையும் விட்டுவைக்காமல், முழு பயிர்களையும் மேய்ந்து போடும்.
வெட்டுக்கிளிகள் ஒன்றாக இணைந்து செயலாற்றும் தன்மை கொண்டவை. தனியாக அவை எவற்றை செய்ய முடியாதோ அவற்றை அவைகள் கூட்டமாக இருக்கும்போது செய்து முடித்துவிடும். பூமியில் சிறியவைகளாயிருந்தும், மகா ஞானமுள்ளவைகள் நான்குண்டு என்று நீதிமொழிகளில் ஆகூர் என்னும் ஞானி, அதில் வெட்டுக்கிளிகளைக் குறித்து, ராஜா இல்லாதிருந்தும், பவுஞ்சு பவுஞ்சாய்ப் புறப்படுகிற வெட்டுக்கிளிகள், அவை மகா ஞானமுள்ளவைகள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த மிகச்சிறிய உயிரினமான வெட்டுக்கிளிகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம் உண்டு. கிறிஸ்துவின் விசுவாசிகள், தாங்கள் தனியாக இருந்து செய்யும் காரியங்களைவிட ஒரு குழுவாக, ஒரே மனதாக ஜெபித்து கர்த்தருக்கென்று உழைக்கும் போது, அரிய பெரிய காரியங்களை செய்யலாம், பெரிய சேனையாக எழும்பி, கர்த்தர் தமது சபையை கொண்டு செய்ய இருக்கும் நோக்கத்தை நிறைவேற்ற முடியும்.
இன்று சபைகளில் ஒருமனம் இல்லாதபடியால், சத்துரு வெற்றி எடுத்து கொண்டு இருக்கிறான். சபையின் ஊழியங்களில் அனைவரும் ஈடுபட வேண்டும். இரவு ஜெப கூட்டம் என்றால், அதற்கு வருகிறவர்கள், சபை ஆராதனைக்கு வருகிறவர்களில் பாதிகூட இருக்க மாட்டார்கள். ஒருமுறை இரவு ஜெபகூட்டத்தை தமிழ்நாட்டில் ஆரம்பித்து வைத்தவர்களில் முக்கியமானவரான சகோதரன் ஜீவானந்தம் அவர்கள் ஒரு இரவு ஜெப கூட்டத்திற்கு வரும்போது, அது அளவுக்கதிகமான ஆசீர்வாதத்தை கொண்டுவரும். அப்படி ஒவ்வொரு ஜெபக் கூட்டமும் உங்கள் வாழ்வில் நீங்கள் எண்ணி பார்க்காத அளவு ஆசீர்வாதங்களை கொண்டு வரும் என்று கூறினார். நாம் நினைக்கிறோம், கர்த்தருக்காக நாம் தியாகமாக இரவு முழுவதும் கண்விழித்து ஜெபிக்க போகிறோம் என்று. ஆனால் கர்த்தர் அதையே நமக்கு ஆசீர்வாதமாக மாற்றுகிறார். சபையாக சுவிசேஷ ஊழியங்களுக்கு செல்லும்போது யார் யார் வீட்டில் இருக்கிறார்களோ, அத்தனைபேரும் ஒருமனமாய் ஊழியத்திற்கு செல்ல வேண்டும். ஒருமனமாய் எல்லா ஊழியங்களிலும் பங்கு பெற வேண்டும்.
ஒரு மனமாய் நாம் ஜெபிக்கும்போது, உலகத்தையே அசைக்க முடியும். ஆதி திருச்சபை ஆரம்ப காலத்தில் விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுள்ளவர்களாயிருந்தார்கள். அவர்கள் ஜெபம்பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது என்று பார்க்கிறோம்.
இன்று நம்மிடையே நிலவுகின்ற சிறுசிறு மனவருத்தங்கள், சிறுசிறு காரியங்கள் நம் சபையின் மூலமாக வர இருக்கின்ற பெரிய எழுப்புதலுக்கு தடையாக இல்லாதபடி ஒருவரையொருவர் மன்னித்து, சபையாக ஒருமனப்படுவோம். சத்துருவுக்கு எதிர்த்து நிற்போம். தேசத்தை கிறிஸ்துவுக்கு சொந்தமாக்குவோம். இந்த கடைசி நாட்களில் ஒருமனமாய் ஒரே இருதயமாய் கர்த்தர் சபையை தெரிந்து கொண்ட நோக்கத்தை நிறைவேற்றுவோம். தேசத்தை அசைப்போம். சேனையாக எழும்பிடுவோம். தேசத்தை கலக்கிடுவோம்.
விசுவாசிகள் என்னும் கூட்டம் உண்டு
அன்பு ஒன்றே அவர் நடுவில் உண்டு
ஒருமனம் ஒற்றுமை அங்கு உண்டு
என்று சொல்லும் நாட்கள் இன்று வேண்டும்
இருள் சூழும் நாட்கள் இனி வருதே
அருள் உள்ள நாட்கள் பயன்படுத்தும்
ஜெபம்: எங்களை நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, இந்த கடைசி நாட்களில் கிறிஸ்தவர் ஒவ்வொருவருக்கும் ஒருமனதை தாரும் தகப்பனே. உம்முடைய கரம் அவர்களை ஒருமனப்படுத்தியது என்று வசனத்தில் வாசிக்கிறோமே, எங்களை ஒருமனப்படுத்தும். ஒருமனமாய் நீர் எங்களை ஏற்படுத்தின நோக்கத்தை நிறைவேற்ற கிருபை செய்யும். ஒருமனமாய் தேசத்தை உமக்கு சொந்தமாக்க கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

20-01-2010 – Pertrorai Noekkum Pillaigal
20th January 2010 - Wednesday
ஜனவரி மாதம் 20-ம் தேதி – புதன் கிழமை
பெற்றோரை நோக்கும் பிள்ளைகள்
இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக்கடவது. நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக்குறித்துப் பேசி, அவைகளை உன் கையின்மேல் அடையாளமாகக் கட்டிக்கொள்வாயாக. - (உபாகமம் 6:6-8)
நம் பிள்ளைகள் நம்முடைய பிரதிபிம்பமாக இருக்கிறார்கள். உருவத்தில் மாத்திரமல்ல, நம்முடைய செய்கைகள், நம்முடைய பேச்சுகள், நம்முடைய ஒவ்வொரு நடவடிக்கைளின் பிரதிபிம்பமாக நம்முடைய பிள்ளைகள் இருக்கிறார்கள்.
ஒருமுறை ஒரு தகப்பன் ஒரு வார்த்தையை சொல்லி தன் பிள்ளையை திட்டுவதை பார்த்தேன். அதன்பின் ஒரு நாள் அந்த பிள்ளை அதே வார்த்தையை சொல்லி தன் தங்கையை திட்டுவதை கண்டேன். கெட்ட காரியங்கள் பிள்ளையின் இருதயத்தில் வெகு சீக்கிரம் பிடித்து கொண்டு விடும். பிள்ளைகளுக்கு பெற்றோரே ஒழுக்கத்தின் பாடம் கற்று கொடுக்கும் பள்ளியாக இருக்கிறார்கள். பிள்ளைகள் பள்ளிக்கு சென்று கற்று கொள்வதை பார்க்கிலும் தங்கள் வீட்டிலேயே அந்த ஒழுக்கத்தின் பாடங்களை கற்று கொள்கிறார்கள்.
பிள்ளைகளை 'கர்த்தர் மேல் அன்பு செலுத்து' என்று சொல்லிகொடுப்பதை விட அதை நாம் செயலில் காட்டும்போது பிள்ளைகள் அதை சீக்கிரமாய் பிடித்து கொள்வார்கள். தினமும் தகப்பன் வேதம் வாசிப்பதை பார்க்கும் பிள்ளைகள் பெற்றோர் சொல்லாமலே வேதத்தை வாசிக்க ஆரம்பிப்பார்கள். பெற்றோர் முழங்கால் படியிட்டு ஜெபிப்பதை பார்க்கும் பிள்ளைகள் தாங்களும் முழங்கால் படியிட்டு ஜெபிக்க ஆரம்பிப்பார்கள். பிள்ளைகள் தங்கள் பெற்றோரின் பிரதிபலிப்பாக இருக்கிறார்கள்.
சிகரெட் பிடிக்கும் தகப்பனுடைய பிள்ளைகள் தாங்களும் சிகரெட் பிடிக்க கற்று கொள்வார்கள். நாம் நம் பிள்ளைகளுக்கு கெட்ட முன் உதாரணமாக ஒருபோதும் இருக்க கூடாது. சினிமா பார்க்கும் பெற்றோரின் பிள்ளைகளும் சினிமா பார்ப்பார்கள். அவர்களுக்கு அது ஒரு பாவமாக தோன்றாது. ஏனெனில் அது அவர்கள் வீட்டில் சாதாரணமாக நடக்கும் விஷயம். இப்படி எத்தனையோ காரியங்களை பிள்ளைகள் தங்கள் பெற்றோரிடமிருந்து கற்று கொள்கிறபடியால், பெற்றோர் மிகுந்த ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
ஒருவரும் எல்லாவற்றிலும் சரியான பெற்றோராக இருக்க முடியாது. ஆனால் முடிந்த வரை பிள்ளைகளை கர்த்தருடைய வழியில் நடத்துவிக்க பழக்க வேண்டும். நாம் கர்த்தரை பிரியப்படுத்துவதை நம் பிள்ளைகள் தங்கள் கண்களால் காண வேண்டும். நாம் கர்த்தரை நேசிப்பதால் எதையெல்லாம் செய்கிறோம் என்பதை நம் பிள்ளைகள் காண வேண்டும். நாம் நம் பெற்றோரை கனப்படுத்துவதை நம் பிள்ளைகள் காண வேண்டும். அப்போது அவர்கள் பெரியவர்களாகும்போது, அவற்றை அவர்களும் செய்வார்கள்.
மட்டுமல்ல, கர்த்தருடைய கற்பனைகளை 'நீ உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக்குறித்துப் பேசு' என்று தேவன் சொல்கிறார். அவைகளை குறித்து பேசி, அதன்படி பெற்றோராகிய நாம் நடக்கும்போது நம் பிள்ளைகள் கர்த்தருக்கு உகந்த பிள்ளைகளாக நடப்பார்கள் என்பதில் சந்தேகமேயில்லை.
அநேக பெற்றோர் தாங்கள் முன் உதாரணமாக இல்லாதபடியால், தங்கள் பிள்ளைகள் கெட்டுபோன பிறகு, ஐயோ, என் பிள்ளை இப்படியாகி விட்டானே என்று தலையிலடித்து கொள்வார்கள். பிள்ளைகளை கண்டிக்கும் நேரத்தில் நிச்சயமாக கண்டிக்க வேண்டும். யாராவது அவர்களுடைய பிள்ளைகளை குறித்து அவன் இப்படி இந்த வார்த்தைகளை சொல்லி தன் வகுப்பில் நடந்து கொண்டான் என்று அவனது பெற்றோரிடம் சொன்னால், அவர்கள், 'ஐயோ என் பிள்ளை அப்படியெல்லாம் சொல்ல மாட்;டான்' என்று தங்கள் பிள்ளையை தலைமேல் தூக்கி வைப்பார்கள். ஆனால் பெற்றோருக்கு தெரியாமல் பி;ளளை என்னென்வோ காரியங்களை செய்து கொண்டுவந்து நிற்பான். அதை பெற்றோரிடம் சொன்னால் அவர்கள் அதை நம்ப மாட்டார்கள். அவனை கூப்பிட்டு கேட்கவும் மாட்டார்கள், கண்டிக்கவும் மாட்டார்கள். பிள்ளையின் மேல் அப்படிப்பட்ட அபார நம்பிக்கை. தொடர்ந்து பிள்ளை துணிகரமாக அப்படி செய்து கெர்ண்டுதான் இருப்பான். பெற்றோர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். யாராவது பிள்ளைகளை குறித்து தவறாக சொன்னால் அது உண்மையானதா என்று கண்டுபிடிக்க வேண்டும். சும்மா அப்படியே விட்டுவிடக் கூடாது. பெற்றோர் தன்னை கண்காணிக்கிறார்கள் என்பதை அறிந்து பிள்ளை திருந்த வாய்ப்புண்டு.
நீதிமான் தன் உத்தமத்திலே நடக்கிறான் அவனுக்குப்பிறகு அவன் பிள்ளைகளும் பாக்கியவான்களாயிருப்பார்கள் (நீதிமொழிகள் 20:7). அப்படிப்பட்ட நீதிமான்களாய், நம் பிள்ளைகளுக்கு முன் உதாரணமாக ஜீவித்து, நம்முடைய வாழ்க்கைக்கு பிறகு நம் பிள்ளைகள் பாக்கியவான்களாய் இருக்கும் கிருபையை தேவன்தாமே நம் ஒவ்வொருவருக்கும் தருவாராக! ஆமென் அல்லேலூயா!
இதோ பிள்ளைகள் கர்த்தரால் வரும்
இந்த ஈவு தேவன் அருளும் சுதந்திரம்
அவராலே கிடைக்கும் பலன் கனியே
ஆயிரம் தலைமுறையாக
ஆண்டவரை சேவிப்போமே
ஜெபம்: எங்களை அளவில்லாமல் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, உம்மை துதிக்கிறோம். பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன் என்று எங்களை ஆசீர்வதித்து, எங்களுக்கு கொடுத்த பிள்ளைகளுக்காக உமக்கு நன்றி. நீர் எங்களுக்கு கொடுத்த அந்த ஆசீர்வாதத்தின் கனிகளை சரியானபடி வளர்க்க எங்களுக்கு ஞானத்தை தருவீராக. உம்முடைய வழிகளில் அவர்களை நடத்தவும், வளர்க்கவும் கிருபை செய்வீராக. எங்கள் பிள்ளைகளை மற்றவர்கள் பார்க்கும்போது உண்மையிலேயே இந்த பிள்ளைகள் கிறிஸ்தவ பிள்ளைகள் என்று சொல்ல தக்கதாக எங்கள் பிள்ளைகள் மற்றவர்களுக்கு சாட்சிகளாக இருக்க கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

Tuesday, January 19, 2010
Biramikkathakka Adhisayam - 19-01-2010 - Tuesday
19th January 2010 - Tuesday
ஜனவரி மாதம் 19-ம் தேதி – செவ்வாய் கிழமை
பிரமிக்கத்தக்க அதிசயம்
நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும். - (சங்கீதம் 139:14).
நீங்கள் எப்பொழுதாகிலும் உங்களுடைய சரீரத்தை குறித்து சிந்தித்து பார்த்திருக்கிறீர்களா? அது எத்தனை ஆச்சரியமான கர்த்தருடைய செயல் என்பதை எப்போதாவது தியானித்ததுண்டா?
பொதுவாக நம் உடலில் ஒரு அடிபட்டால், ஆ வலிக்கிறது என்போம், பசித்தால்; வயிறு பசிக்கிறது, சாப்பாடு போடுங்கள் என்போம். இதை தவிர பிரதானமாக நாம் எதையும் யோசிப்பதில்லை. நாம் இதுவரை யோசிக்காத பல காரியங்கள் உண்டு.
சாதாரணமாக நாம் ஒரு மணி நேரத்திற்கு 1050 முறை சுவாசிக்கிறோம். ஒரே நாளில் 25,000தடவைக்கு மேலாக சுவாசித்து விடுகிறோம். இரவும் பகலும் நுரையீரலாகிய இயந்திரம் ஓடிக்கொண்டே இருக்கிறது. நம்முடைய எந்த சுய முயற்சியுமின்றி இயற்கையாகவே இயங்கும்படி தேவன் அதை அமைத்திருக்கிறார். தொடர்ந்து 10 நிமிடத்திற்கு சுவாசிக்க முடியாமற் போனால் மரணம் தான். நம்முடைய 25,000 சுவாசங்களும் கர்த்தருடைய கரத்தில்தான் உள்ளது.
இதயம், அதிலிருந்ததூன் உடலின் பல பாகங்களுக்கும் இரத்தம் செல்கிறது. சுருங்கி, விரிந்து தனது வேலையை ஒழுங்காக செய்து கொண்டிருக்கும் இதயம் ஏதோ ஒரு காரணத்தால் இயங்க மறுத்தால், மூளை பகுதிக்கு செல்லும் இரத்த ஓட்டம் தடைபடும். மூன்று நிமிடங்கள் இதய துடிப்பு நின்று, மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் தடைபட்டால், மூளை இயங்குவது நின்று விடும். பின் Brain Dead எனப்படும் நிலைமைதான் ஏற்படும். அதாவது, இதயத்தை துடிக்க வைத்தாலும் மூளை வேலை செய்யாததால், உயிர் இருக்கும், ஆனால் உணர்வுகள் இருக்காது. கோமா நிலையில் இருக்கும் நிலை ஏற்படும். இதய துடிப்பு அத்தனை முக்கியமானது! அது நிற்காவண்ணம் பிறந்த நேரத்திலிருந்து விடாமல் துடிக்க வைத்து கொண்டிருக்கும் தேவனுடைய கிருபை எவ்வளவு பெரியது!
ஒவ்வொரு முறையும் நம் உடலிலிருந்து வெளியேறும் கழிவு நீரான சிறுநீர் வெளியேறுவதும் தேவ தயவால்தான் என்பது உங்களுக்கு தெரியமா? ஏதோ ஒரு காரணத்தினால் சிறுநீரகம் (Kidney) இயங்கவில்லை என்றால் என்ன ஆகும் தெரியுமா? இயற்கையாக சிறுநீர் வெளியேறாததால் கழிவு நீர் இரத்தத்தோடு கலந்து விடும். பின் இரத்தத்தில் Urea and Createnin அளவு அதிகமாகி dialysis என்ற முறையின்படி இயந்திரத்தின் மூலம் சிறுநீரை பிரிக்க வேண்டும். அந்த மாதிரியான வேதனை நிறைந்த காரியம் வேறு எதுவுமில்லை.
ஆம் பிரியமானவர்களே, நாம் இப்போது சுவாசிப்பது, நம் உடலுறுப்புகள் நன்றாக இயங்குவது, சிறுநீர் கழிவது எல்லாம் தேவ கிருபையே. நம் உடலுறுப்புகளெல்லாம் சரியாக இயங்குவதால் நாம் அதிகமாக இதைப்பற்றி யோசிப்பதுமில்லை, தேவனுக்கு நன்றி செலுத்துவதுமில்லை. ஒரு நாள் மருத்துவமனைக்கு சென்று பாருங்கள், ஏதோ ஒரு உறுப்பு இயங்காததால் மக்கள் படுகிற வேதனையை பாருங்கள். அதன்பின் உங்களது உடலுறுப்புகளுக்காக தேவனை துதிக்காமல் உங்களால் இருக்க முடியாது. உங்களது ஜெப நேரத்தில் நன்றி செலுத்தினால் அதுவே 5 நிமிட நேரத்தை எடுத்து கொள்ளும்.
நாம் தூங்குவதும் கர்த்தருடைய சுத்த கிருபையே! இரவில் தூங்க முடியாமல், தூக்க மாத்திரைகளை சாப்பிட்டும் உறங்காமல் தவிப்பவர்கள் எத்தனை பேர்! உலகில் எத்தனையோ பேர் எத்தனையோ விதமான நோய்களால் பீடிக்கப்பட்டு, வருத்தத்திலும் வேதனைகளிலும் தவிக்கம்போது நம்மை தேவன் சுகத்துடன் பெலத்துடன் பாதுகாத்து வருகிறாரே அதுவும் அவருடைய சுத்த கிருபையே! நம்முடைய சுவாசமும் இதய துடிப்பும் தேவனுடைய கரத்திலிருக்கிறது. அவரே அதை நமக்கு இரக்கமாய் தந்திருக்கிறார். ஆகவே உயிரோடிக்கும் நாள் வரை தேவனுக்காய் வாழ்வேன் என் தீர்மானித்து அவருக்காய் வாழ்வோம். அவருடைய சுத்த கிருபைக்காய் உள்ளத்திலிருந்து நன்றி செலுத்துவோம். ஆமென் அல்லேலூயா!
ஜீவன் சுகம் பெலன் யாவுக்கும் ஸ்தோத்திரம்
தினம் தினம் அருள் நன்மைக்காகவும் ஸ்தோத்திரம்
ஆவலுடன் ஸ்தோத்திரம்! உமது
அன்பினுக்கே ஸ்தோத்திரம் மாநேசா!
ஜெபம்: எங்களை படைத்து காத்து இரட்சிக்கிற எங்கள் நல்ல தேவனே உம்மை துதிக்கிறோம். எங்களது சரீரத்தின் உறுப்புகள் ஒவ்வொன்றையும் சீராக படைத்து, அவை சரியாக அதினதின் வேலையை செய்யும்படியாக தேவன் பாராட்டியிருக்கிற கிருபைக்காக உம்மை துதிக்கிறோம். ஒரு உறுப்பு சரியாக இயங்காவிட்டாலும் எத்தனை பாடுகள், வேதனைகள் தகப்பனே! உம்முடைய தயவால் எல்லாம் சரியாக இயங்க வைத்திருக்கிறீரே உமக்கு நன்றி. இந்த வேளையிலும் மருத்துவமனைகளிலும் வீடுகளிலும் வேதனையோடு பாடுகளோடு இருக்கிற ஒவவொருவரையும் நினைக்கிறோம். அவர்களும் உம்மை அறிந்து கொண்டு, உம்முடைய சுகமளிக்கும் கிருபைகளை பெற்று கொள்ள கிருபை செய்வீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

Monday, January 18, 2010
Vilaiuyarndha Muthu - 18-01-2010 - Monday..
18th January 2010 - Monday
ஜனவரி மாதம் 18-ம் தேதி – திங்கள் கிழமை
விலையுயர்ந்த முத்து
மேலும், பரலோகராஜ்யம் நல்ல முத்துக்களைத் தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாயிருக்கிறது. அவன் விலையுயர்ந்த ஒரு முத்தைக் கண்டு, போய், தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று, அதைக் கொள்ளுகிறான். - (மத்தேயு 13:45,46).
இயேசுகிறிஸ்து கூறின இந்த உவமையில் விலையுயர்ந்த முத்தை குறித்து நாம் காண்கிறோம். இதில் ஒரு வியாபாரி தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று ஒரு முத்தை வாங்குகிறான். நாம் உலகத்தில் உள்ள விலையுயர்ந்த கற்களை பார்க்கும்போது, வைரம்தான் மிகவும் விலையேறப்பெற்றதாக இருக்கிறது. ஆனால் இந்த இடத்தில் முத்தை அந்த வியாபாரி விலையுயர்ந்ததாக காண்கிறான்.
இயேசுகிறிஸ்துவும் பரலோகத்தில் தமக்குள்ள எல்லா வசதிகளையும், எல்லா அதிகாரங்களையும், தம் தகப்பனின் பக்கத்தில் இருப்பதையும் விட்டு, விலையுயர்ந்த முத்தாகிய உங்களுடைய என்னுடைய ஆத்துமாக்கள் இரட்சிப்பை பெற்றுக்கொள்ளும்படியாக இந்த உலக்திற்கு வந்தார். ஏன் கர்த்தர் ஒரு வைரத்தையோ, அல்லது வானளவிற்கு விலை உயர்ந்து வரும் தங்கத்தையோ குறித்து சொல்லாமல், முத்தை குறிப்பிடுகிறார்?
உங்களுக்கு தெரியுமா? வைரமானது நான்கு விதமான 'C' க்களைக் கொண்டுதான் அதன் தரம் நிர்ணயிக்கப்படுகிறது. அவை Cut, Color, Clarity & Carat-weight ஆகும். அதாவது அதை வெட்டுகிற பாணி, அதன் நிறம், அதனுடைய தெளிவு மற்றும் அதன் எடை இவைகளை கொண்டுதான் அதன் விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு மனிதனின் கைவண்ணம் அதனுடைய முக்கியத்துவத்திற்கு தேவைப்படுகிறது. மனிதன் செய்யும் கைவண்ணமாக அதன் விலையில் ஏற்றகுறைவுகள் உண்டாகிறது.
ஆனால், முத்து அப்படியல்ல, இயற்கையாகவே அது விலையேறபெற்றதாக காணப்படுகிறது. உலகத்தின் விலையுயர்ந்த கற்களில், முத்து மாத்திரமே இயற்கையாக கிடைக்கிறது. அதை வைத்து, ஆபரணம் செய்யும்போதும் அது இருக்கிறவண்ணமாகவே செய்யப்படுகிறது.
அதைபோலத்தான் நம் இரட்சிப்பும் நம்முடைய கைவண்ணம் எதுவும் இல்லாமல், நம்முடைய முயற்சி எதுவும் இல்லாமல், நமக்கு கிடைக்கிறது. அதற்காக நம் தேவன் மிகப்பெரிய கிரயத்தை செலுத்தியிருக்கிறார். தம்முடைய ஒரே பேறான குமாரனை இந்த உலகத்திற்கு அனுப்பினார். மகிமையின் தேவனாகிய கிறிஸ்து, பரலோகத்தின் மகிமையை விட்டு அந்த விலையேறப்பெற்ற முத்தாகிய உங்களையும் என்னையும் தமக்கு சொந்தமாக்கி கொள்ள இந்த பாவ உலகத்திற்கு இறங்கி வந்தார். நாம் கொடுக்கும் எந்த விலையுயர்ந்த காரியங்களையும்விட விலையுயர்ந்த எந்த பொருட்களையும் விட மிகவும் விலையுயர்ந்த, மாசற்ற, குற்றமற்ற தம்டைய சொந்த இரத்தத்தையே கிரயமாக செலுத்தி, விலையெறப்பெற்ற முத்தாகிய நம்மை தமக்கு சொந்தமாக்கி கொண்டார். 'கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்' - (1 கொரிந்தியர் 6:20) என்று பார்க்கிறோம்.
அன்பு சகோதரனே சகோதரியே, இந்த விலையேறப்பெற்ற இரட்சிப்பை பெற்றிருக்கிறீர்களா? அந்த வியாபாரி தனக்கிருந்த எல்லாவற்றையும் விற்று அந்த விலையுயர்ந்த முத்தை வாங்கினதுபோல, இயேசுகிறிஸ்து தமக்கிருந்த மகிமை எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்து, விலையுயர்ந்த முத்தாகிய நம்மை தம்முடைய சொந்த இரத்தத்தை சிந்தி விலைக்கிரயம் கொடுத்து வாங்கியிருக்கிறாரே! அதை உணர்ந்தவர்களாக நம்முடைய வாழ்க்கையை கர்த்தருக்கு ஒப்புகொடுத்திருக்கிறோமா? விலையுயர்ந்த உங்கள் ஆத்துமா கர்த்தருக்கு சொந்தமாயிருக்கிறதா? இல்லை, சத்துருவுக்கு சொந்தமாயிருக்கிறதா? உங்களை மீட்பதற்காக அவர் கொடுத்த விலைகிரயம் மிகவும் அதிகம். நம்மால் அதை எந்த கிரயம் கொடுத்தும் வாங்க முடியாது. நம்மால் நம் சொந்த கிரியைகளினால், ஆத்தும இரட்சிப்பை பெற்று கொள்ளவும் முடியாது. இந்த உலகத்தில் அநேகர் நினைக்கிறார்கள், தங்கள் ஆத்துமா இரட்சிக்கப்படுவதற்கு அவர்கள் மிகவும் உழைக்க வேண்டும், பரலோகம் செல்வதற்கு தங்களுடைய சொந்த முயற்சி வேண்டும் என்று நினைக்கிறார்கள். இல்லை, நம்முடைய கிரியைகள் நமக்கு இரட்சிப்பை தராது. தங்கள் சரீரங்களை காயப்படுத்தி, இரத்தம் சிந்த வைத்து, தங்களை வருத்தி கொண்டால்தான், தங்களுக்கு பரலோகம் கிடைக்கும் என்று பலர் நினைக்கிறார்கள். கர்த்தர் நம் ஆத்தும இரட்சிப்பை மிக எளிதாக வைத்திருக்கும்போது, அதை அறியாதவர்களாக மனிதன் அங்குமிங்கும் அதை தேடி அலைந்து திரிகின்றான்.
'இருக்கின்ற இடம் விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைந்து திரிகின்றார்; ஞான தங்கமே' என்று பழைய கால புலவர் ஒருவர் பாடியுள்ளார். கர்த்தருடைய இரட்சிப்பு மிகவும் எளிதானது. அதை தேடி ஓடி எங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இருக்கின்ற இடத்திலேயே முழங்கால்படியிட்டு, 'தேவனே பாவியாகிய என்மேல் கிருபையாயிரும். நான் பாவி என்று ஒத்து கொள்கிறேன். எனக்காக உமது ஒரே பேறான குமாரனாகிய இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் வந்து, தம் சொந்த இரத்தத்தை சிந்தி அதனால் என் பாவங்களை கழுவி சுத்திகரித்தார் என்று விசுவாசிக்கிறேன். அவரை என் சொந்த இரட்சகாராக ஏற்று கொள்கிறேன். இயேசுவே என் உள்ளத்தில் வாரும். என் பாவங்களை மன்னியும். நீரே என் ஆண்டவராக இருந்து என் வாழ்க்கையை நடத்தும்' என்று ஜெபிக்கும்போது, அவர் உங்கள் பாவங்களை மன்னித்து, உங்களை ஒரு விலையுயர்ந்த முத்தாக ஏற்று கொண்டு, உங்கள் உள்ளத்தில் வந்து வாசம் பண்ணுவார். மனுஷன் உலக முழுவதையும் ஆதாயப்படுத்தினாலும் தன் ஆத்துமாவை நஷ்டப்படுத்தினால் அதினால் அவனுக்கு லாபம என்ன? என்று வேதம் கேட்கிறது. உங்கள் ஆத்தும இரட்சிப்பு மிகவும் விலையுயர்ந்ததாக இருப்பதால், நீங்கள் கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுகொண்டு, பரலோக ராஜ்ஜியத்திற்கு உங்களை ஆயத்தப்படுத்தி கொள்ள தேவன் தாமே உங்களுக்கு கிருபை செய்வாராக. கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!
வானத்தின் கீழே பூமி மேலே
வானவர் இயேசு நாமம் அல்லால்
இரட்சிப்படைய வழியில்லையே
இரட்சகர் இயேசு வழி அவரே
வருவாய் தருணமிதுவே
அழைக்கிறாரே வல்ல
ஆண்டவர் இயேசுவுன்னை
ஜெபம்: எங்களை அதிகமாய் நேசிக்கிற எங்கள் நல்ல தகப்பனே, எங்கள் ஆத்தும இரட்சிப்பை நீர் விலையுயர்ந்த முத்தாக எண்ணினபடியால் உமது சொந்த குமாரனையே எங்களுக்காக அனுப்பி எங்கள் பாவங்களுக்காக அவரது சொந்த இரத்தத்தையே சிந்தி எங்களை மீட்டு கொண்டீரே உமக்கு நன்றி. இந்த நாளிலும் மேற்கண்ட ஜெபத்தை செய்த ஒவ்வொருவருக்காவும் உம்மை துதிக்கிறேன். உம்முடைய இரட்சிப்பை பெற்று கொண்டு பரலோக பாக்கியத்தை பெற்று கொள்ள கிருபை செய்யும். இயேசுவின் நாமமே அல்லாமல் இரட்சிக்கப்படுவதற்கு வேறொரு நாமம் அருளப்படவில்லை என்கிற உண்மை அவர்கள் அறிந்து இரட்சிக்கப்பட கிருபை செய்யும். அவர்கள் கடைசி பரியந்தம் உமக்குள் நிலைத்திருக்க கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

17-01-2010 – Dhevaalayam Selvoam
17th January 2010 - Sunday
ஜனவரி மாதம் 17-ம் தேதி – ஞாயிற்று கிழமை
தேவாலயம் செல்வோம்
கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்துப் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்திலே கர்த்தரைப் பக்தியுடன் பாடி..பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள். - (கொலேசேயர் 3:16,17).
ஒரு போதகர், தனது சபைக்கு எப்போதும் வரும் ஒருவர் தொடர்ந்து வராததை கண்டார். சில வாரங்கள் கழித்து, அவர் வராததால், அவரை காண சென்றார். அங்கு அந்த மனிதர், தனியாக நெருப்பு எரியும் இடத்திற்கு பக்கத்தில் அனலுக்காக அமர்ந்திருப்பதை கண்டார். ஆரம்பத்தில் அவரை குசலம் விசாரித்து விட்டு, அவர் பக்கத்தில் போய் அமர்ந்தார். ஆனால் ஒன்றும் பேசவில்லை.
இருவரும் பேசாமல் அமர்ந்து இருந்தனர். அந்த போதகர் நெருப்பு எரிவதையே பார்த்து கொண்டிருந்தார். சற்று நேரம் கழித்து, அவர் ஒரு கரண்டியை எடுத்து, எரிந்து கொண்டிருந்த ஒரு கரித்துண்டை எடுத்து தனியே வைத்தார். கனகனவென்று எரிந்து கொண்டிருந்த அந்த கரித்துண்டு சற்று நேரம் ஆனவுடன், சாம்பல் பூத்து போய், அப்படியே அடங்கி அணைந்து போனது.
பின்னர், அந்த போதகர் 'சரி நான் போக வேண்டும்' என்று சொல்லி எழுந்தார். போவதற்கு முன், மீண்டும் அந்த கரித்துண்டை எடுத்து, நெருப்பில் போட்டார். உடனே அது பற்றி கொண்டு எரிய ஆரம்பித்தது. இதை கவனித்து கொண்டிருந்த அந்த மனிதர், ' போதகர் ஐயா அவர்களே, உங்களுடைய அமைதியான இந்த செய்திக்காக நன்றி! நான் அடுத்த வாரம் உங்களை ஆலயத்தில் பார்க்கிறேன்' என்று கூறினார்.
ஆம் பிரியமானவர்களே! ஆலயத்திற்கு செல்வது மிகவும் முக்கியமானது. நாம் கர்த்தருக்குள் அனலாயிருப்பதற்கு அது உதவும். தனியாக இருக்கும் யாரும் எழும்பி பிரகாசித்து விட முடியாது, 'ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்ளூ அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு நல்ல பலனுண்டாகும். ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்ளூ ஒண்டியாயிருந்து விழுகிறவனுக்கு ஐயோ, அவனைத் தூக்கிவிடத் துணையில்லையே' - (பிரசங்கி 4:9:10) என்று வேதம் கூறுகிறது.
ஆலயத்திற்கு செல்லும்போது, கர்த்தர் அவருடைய வீட்டின் நன்மையினால் நம்மை திருப்தியாக்குகிறார். கர்த்தர் அங்கு நம்மை ஆசீர்வதிக்கிறார். நம்மை விசாரிக்க ஆத்துமாக்களை தருகிறார். நமக்காக, நம் குடும்பத்திற்காக, நமது தேவைகளுக்காக ஜெபிக்க ஒரு கூட்ட மக்களை நமக்கென்று ஆயத்தப்படுத்துகிறார். அன்போடும் கரிசனையோடும் நம்மை ஆதரிக்க ஆத்துமாக்களை தேவன் தருகிறார்.
ஆலயத்திலிருந்து நாம் நம் தாலந்துகளை கர்த்தருக்கென்று உபயோகிக்க தேவன் கிருபை செய்கிறார். அழிந்து போகிற ஆத்துமாக்களுக்காக திறப்பில் நின்று ஜெபிக்கிறவர்களாக நம்மை மாற்றுகிறார். எல்லாவற்றிற்கும் மேலாக வேத வசனங்களின் பொக்கிஷங்களை நமக்கு வெளிப்படுத்துகிறார். வேதவசனத்தின் ஆகாரத்தினால் நம் ஆத்துமாக்கள் திருப்தியாகும்படி தேவன் கிருபை செய்கிறார்.
தேவாதி தேவனை ஆராதிக்க அவருடைய வீடாகிய தேவாலயத்திற்கு நாம் செல்ல வேண்டும். அங்கு நாம் கூடி ஆராதிக்கும்போது தேவ பிரசன்னம் நம்மை நிரப்பும். எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு இயேசுகிறிஸ்துவே மேலான தலையாக இருந்து நம்மை எல்லாவற்றிலும் நிறைவாக நடத்துவார்.
இவைகளை பெற்று அனுபவிக்காதபடி சோம்பலாய் யாரும் வீட்டில் இருக்ககூடாது. 'ஒரு நாள்தான் எனக்கு விடுமுறை, அதில் நான் சற்று ஓய்வெடுக்க வேண்டும்' என்று கூறிக்கொண்டு யாரும் சபை நடக்கும் நேரத்தில் உறங்கி கொண்டிருக்க கூடாது. தேவனின் ஆசீர்வாதங்களை நாம் இழக்க நேரிடும். கூடுமானவரை சபையின் எல்லா கூட்டங்களிலும் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதத்தை பெற்று கொள்ளவேண்டும்.
இரும்பு திரையாக சுவிசேஷம் செல்லாத அநேக நாடுகளில் அவர்களுக்கு தொழுது கொள்ள ஆலயம் கூட கிடையாது. சத்தமாய் அவரை ஆராதிக்க முடியாது. ஆனால் எல்லா வசதிகளும் இருந்தும் சபைக்கு செல்லாதிருக்கிறவர்கள் உண்டு. ஆலயத்திற்கு செல்வோம். ஆசீர்வதங்களை பெற்று கொள்வோம். ஆமென் அல்லேலூயா!
செல்வோம் வாருங்கள் அப்பா வீட்டிற்கு
தேவ ஆலயத்திற்கு
போதிப்பார் தம் வழிகளை
நாமும் நடப்போம் அவர் பாதைகளில்
செல்வோம் வாருங்கள் அப்பா வீட்டிற்கு
தேவ ஆலயத்திற்கு
ஜெபம்: எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, உம்மை துதிக்கிறோம். உம்முடைய வீட்டிற்கு வந்து நீர் தரும் நன்மைகளால் திருப்தி அடையும்படி செய்கிறீரே உமக்கு நன்றி. ஆலயத்திற்கு செல்லாமல் யாராவது இருப்பார்களானால், அவர்களும் வந்து உம்முடைய ஆசீர்வாதத்தை பெற்று கொள்ள கிருபை செய்வீராக. ஆலயத்திற்கு வருவதினால் உண்டாகும் நன்மைகளை, கிருபைகளை பெற்று கொள்ள உதவி செய்வீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

Friday, January 15, 2010
15-01-2010 – Anbu Kooruveyen Innum Adhigamaai
15th January 2010 - Friday
ஜனவரி மாதம் 15-ம் தேதி – வெள்ளி கிழமை
அன்புகூருவேன் இன்னும் அதிகமாய்
பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம்; ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான். அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார் - (1 யோவான் 4:7,8).
ஒரு பெண் தன் வீட்டிற்கு வெளியே வந்து பார்த்த போது, மூன்று வயதான மனிதர்கள், அங்கு திண்ணையில் அமர்ந்திருப்தை கண்டாள். அவர்கள் யார் என்று அவளுக்கு அடையாளம் தெரியவில்லை. அவர்களை நோக்கி, 'நீங்கள் யார் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் பார்த்தால் பசியோடிருப்பவர்களை போல தெரிகிறது. உள்ளே வாருங்கள், வந்து ஏதாவது சாப்பிடுங்கள்' என்று கூறினாள். அப்போது அவர்கள், 'இந்த வீட்டின் மனிதர் உள்ளே இருக்கிறாரா?' என்று கேட்டார்கள். அந்த பெண் இல்லை என்றதும், 'இல்லை, நாங்கள் உள்ளே வரமாட்டோம்' என்றார்கள். சாயங்காலமானபோது, கணவர் வீட்டிற்கு வந்தார். அப்போது அந்த பெண், நடந்ததை கூறினாள். அதற்கு அந்த கணவர், 'அவர்களை உள்ளே அழைத்து வா' என்று கூறினார். அந்த பெண் அழைக்க போனபோது, அந்த மனிதர்கள், 'நாங்கள் மூவரும் ஒன்றாக உள்ளே வரமுடியாது' என்றனர். அப்போது அந்த பெண் ஏன் என்று கேட்டதற்கு, 'இவருடைய பெயர் செல்வம், இவர் வெற்றி, என்பெயர் அன்பு. இவர்களில் யார் உள்ளே வர வேண்டும் என்று உன் கணவரிடம் பேசி முடிவெடுத்து விட்டு வா' என்று கூறினர். அந்த பெண் உள்ளே சென்று தன் கணவரிடம் கூறினபோது, அவர் மிகவும் சந்தோஷப்பட்டு, 'நாம் செல்வத்தை அழைப்போம். அப்போது நம் வீடு செல்வத்தினால் நிறையும்' என்று கூறினார். அதற்கு மனைவி, 'வெற்றியை அழைத்தால், செல்வம் தன்னால் வந்துசேரும்' என்று கூறினாள். அதை கேட்டு கொண்டிருந்த அவர்களுடைய மகன், 'அப்பா, அம்மா, நாம் அன்பை அழைத்தால், நம் வீடு அன்பால் நிறைந்திருக்குமே' என்று கூறினான். அதற்கு எல்லாரும் உடன்பட்டு, அன்பை உள்ளே அழைப்போம் என்று தீர்மானித்து, அந்த பெண் அந்த வயதானவர்ளிடம் போய், 'ஐயா அன்பு, நீங்கள் உள்ளே வாருங்கள்' என்று கூறினாள். அன்பு உள்ளே செல்ல எழுந்தார், அப்போது வெல்வமும், வெற்றியும் கூட உள்ளே வர ஆரம்பித்தனர். அதை கண்ட அந்த பெண், 'நான் அன்பைத்தானே அழைத்தேன், நீங்களும் வருகிறீர்களே' என்று கேட்டாள். அதற்கு அவர்கள் சொன்னார்கள், 'நீ செல்வத்தை மட்டும் அழைத்திருந்தால், செல்வம் மட்டும் உள்ளே வந்திருப்பார், வெற்றியை அழைத்திருந்தால் அவர் மட்டும் உ;ளளே வந்திருப்பார், ஆனால், நீ அன்பை அழைத்ததால், நாங்கள் மூன்று பேரும் உள்ளே வருகிறோம், அன்பு எங்கே உண்டோ அங்கு செல்வமும், வெற்றியும் எப்போதும் உண்டு' என்றனர்.
அன்பானவர்களே, நாம் மற்றவர்களிடத்தில் எப்படி அன்புகூருகிறோம்? நம்மிடத்தில் அன்பு என்ற ஆவியின் கனி உண்டா? நம் சொந்த சகோதர சகோதரிகளிடத்தில் அன்புகூருகிறோமா? நம் பெற்றோரிடத்தில் அன்பு கூருகிறோமா? நம் சக விசுவாசிகளிடத்தில் அன்பு கூருகிறோமா? அன்பில்லாதவன் தேவனை அறியான் என்று வசனம் கூறுகிறது. எத்தனை பேர் தங்கள சொந்த சகோதர சகோதரிகளிடத்தில் அன்பு கூராமல், உலகத்திலுள்ள மற்றவர்களை நேசிக்கிறவர்களாக இருக்கின்றனர்! சிலர் வருஷகணக்கில் தங்கள் சகோதர சகோதரிகளிடத்தில் பேசாமல் இருக்கின்றனர். தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்; தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்? (1யோவான் 4:20) என்று வேதம் கேட்கிறது. ஆகவே நாம் நம் சொந்த சகோதரரிடத்திலும் சகோதரிகளிடத்திலும் அன்புகூருவோம்.
அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான். அன்பு வரும்போது செல்வமும் ஆரோக்கியமும், வெற்றியும் உலக ஆசீர்வாதங்களும் நம்மை வந்து சேரும். முதலாவது தேவனிடத்திலும், பின்பு மற்றவர்களிடத்திலும் அன்புகூர வேண்டும். இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால்: உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே; இவைகளிலும் பெரிய கற்பனை வேறொன்றுமில்லை என்றார் (மாற்கு 12:29-31) என்று கூறினார். அன்புகூரும் போது, அதில் மற்ற கற்பனைகள் எல்லாம் அடங்கி யிருக்கிறது. அந்த பெரிதான தியாகமான அன்பால் நம் இருதயம் நிறைந்திருப்பதாக!
மனிதர் யாரிடமும் பாசம் சாட்டுவோம்
இயேசு மந்தைக்குள் அழைத்திடுவோம்
அதி உற்சாகமாய் அதி சீக்கிரமாய்
இராஜ பாதையை செம்மையாக்குவோம்
நம் இயேசுராஜாவே இதோ வேகம் வாராரே
அதி வேகமாய் செயல்படுவோம்
ஜெபம்: எங்கள் மேல் அன்புகூர்ந்து, எங்களை அளவில்லாமல் நேசிக்கும் நல்ல தகப்பனே, உம்மை துதிக்கிறோம். நாங்களும் மற்றவர்கள் மேல் அன்புகூர கிருபை செய்யும். அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான் என்ற வார்த்தையின்படி நாங்கள் மற்றவர்களிடத்தில் அன்புகூரவும், உம்மை அறிகிற அறிவில் வளரவும் கிருபை செய்யும். இந்த நாளில் ஹைட்டி என்னும் தேசத்தில், பூமி அதிர்ச்சியினால் பல்லாயிரக்கணக்கோர் மரித்து, வீடுகளை இழந்து தவிக்கிற இந்த நேரத்தில் அவர்களை உம்முடைய கிருபையுள்ள கரத்தில் ஒப்பு கொடுக்கிறோம். தங்களுக்கு பிரியமானவர்களை இழக்க கொடுத்த ஒவ்வொருவரையும் ஆற்றி தேற்றுவீராக. தங்களுடைய எல்லாவற்றையும் இழந்த தவிக்கிற அந்த ஏழை மககளுக்கு உதவிகள் சீக்கிரம் வரதக்கதாகவும் அவர்களுடைய தேவைகள் சந்திக்கப்படவும் கிருபை செய்வீராக. இந்த குளிரான நேரத்தில் தங்க வீடு இல்லாமல், தண்ணீர் வசதிகளோ மின்சார வசதிகளோ இல்லாமல் தவிக்கிற அவர்களை கண்ணோக்கி பார்த்து அவர்களுக்கு தயவாய் இரங்கும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

Thursday, January 14, 2010
14-01-2010 – பாவ அறிக்கை - ( Paava Arikkai)
14th January 2010 - Thursday
ஜனவரி மாதம் 14-ம் தேதி – வியாழன் கிழமை
பாவ அறிக்கை
நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்; என் மீறுதல்களைக் கர்த்தருக்கு அறிக்கையிடுவேன் என்றேன்; தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர். - (சங்கீதம் 32:5).
1983ம் ஆண்டு, கார்லா டக்கர் (Karla Tucker) என்னும் பெண், இரண்டு பேரை கொடூரமாக கொலை செய்தாள். அதினால் அவள் சிறையிலிருந்தபோது, கிறிஸ்துவை குறித்து கேள்விபட்டு, தன் பாவங்களை அறிக்கையிட்டு, அவரை தன் சொந்த இரட்சகராக ஏற்று கொண்டாள். அதன் பின் அவள் வாழ்க்கை மாறியது. மற்றவர்களுக்கு உதவுபவளாக, தன் நடத்தையில் நன்கு முன்னேறியதால், அவளை தூக்குதண்டனையிலிருந்து, ஆயுட்கால சிறைக்கு மாற்றுவார்கள் என அவளோடு இருந்த அநேகர் நினைத்தனர். ஆனால், அவள் அனுப்பிய மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 1998-ம் ஆண்டு அவள் தூக்கிலிடப்பட்டாள்.
வேதத்தில் ஆகான் என்னும் ஒருவனும் தான் செய்த பாவத்தை அறிக்கையிட்டான். 'அப்பொழுது ஆகான் யோசுவாவுக்குப் பிரதியுத்தரமாக: மெய்யாகவே நான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தேன்; இன்னின்ன பிரகாரமாகச் செய்தேன். கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனிய சால்வையையும், இருநூறு வெள்ளிச்சேக்கலையும், ஐம்பது சேக்கல் நிறையான ஒரு பொன்பாளத்தையும் நான் கண்டு, அவைகளை இச்சித்து எடுத்துக்கொண்டேன்; இதோ, அவைகள் என் கூடாரத்தின் மத்தியில் பூமிக்குள் புதைத்திருக்கிறது. வெள்ளி அதின் அடியிலிருக்கிறது என்றான்' - (யோசுவா 7:20,21). அவன் செய்த பாவத்தினிமித்தம் 36 இஸ்ரவேலர் எதிரிகளால் வெட்டி கொல்லப்பட்டார்கள். அந்த ஆகான் தன் பாவத்தை தேவனுக்கு முன்பாக அறிக்கையிட்டான், ஆனாலும் அவன் செய்த பாவத்திற்க்கு தக்க தண்டனையை அவன் அனுபவித்தான். 'அப்பொழுது இஸ்ரவேலரெல்லாரும் அவன்மேல் கல்லெறிந்து, அவைகளை அக்கினியில் சுட்டெரித்து, கற்களினால் மூடி;அவன்மேல் இந்நாள்வரைக்கும் இருக்கிற பெரிய கற்குவியலைக் குவித்தார்கள்'. - (யோசுவா 7:25,26).
தாவீது ராஜாவும் பாவம் செய்த போது, 'நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்; என் மீறுதல்களைக் கர்த்தருக்கு அறிக்கையிடுவேன் என்றேன்; தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர்' என்று அறிக்கையிட்டார். 'அப்பொழுது தாவீது நாத்தானிடத்தில்: நான் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ் செய்தேன் என்றான்; நாத்தான் தாவீதை நோக்கி: நீ சாகாதபடிக்கு, கர்த்தர் உன் பாவம் நீங்கச் செய்தார். ஆனாலும் இந்தக் காரியத்தினாலே கர்த்தருடைய சத்துருக்கள் தூஷிக்க நீ காரணமாயிருந்தபடியினால், உனக்குப் பிறந்த பிள்ளை நிச்சயமாய்ச் சாகும் என்று சொல்லி, நாத்தான் தன் வீட்டுக்குப் போய் விட்டான். அப்பொழுது கர்த்தர் உரியாவின் மனைவி தாவீதுக்குப் பெற்ற ஆண்பிள்ளையை அடித்தார்' - (2சாமுவேல் 12:13,15). அவர் தன் பாவத்தை அறிக்கையிட்டாலும், தான் செய்த பாவத்தின் விளைவை அனுபவிக்க வேண்டியதாயிருந்தது. 'நீ ஒளிப்பிடத்தில் அதைச் செய்தாய்; நானோ இந்தக் காரியத்தை இஸ்ரவேலர் எல்லாருக்கு முன்பாகவும், சூரியனுக்கு முன்பாகவும் செய்விப்பேன்' என்று தேவன் கூறினார். அதனபடியே நடந்தது.
மற்ற மதத்தை சேர்ந்தவர்கள், சொல்லும் வார்த்தை 'நீங்கள் கிறிஸ்தவர்கள், செய்கிற பாவத்தை செய்துவிட்டு, பின் இயேசுகிறிஸ்துவிடம் போய் அறிக்கையிட்டால், அவர் மன்னித்து விடுவார். ஆகவே நீங்கள் துணிகரமாக பாவம் செய்கிறீர்கள்' என்று குற்றம் சாட்டுகிறார்கள். அவர்களுக்கு வேதத்தில் உள்ள நியதிகள் தெரியாது. பாவத்தை அறிக்கையிடும்போது, நிச்சயமாக நமக்கு மன்னிப்பு உண்டு. நமக்கு ஆக்கினை தீர்ப்பு இல்லை என்பது உண்மைதான். ஆனால், தேவனிடம் மன்னிப்பு பெற்ற பிறகும், நாம் செய்த பாவத்திற்கு ஏற்ற தண்டனையை அனுபவிக்க வேண்டி வரும். நீதிமொழிகள் - 11:31 கூறுகிறது, 'இதோ, நீதிமானுக்கு பூமியில் சரிகட்டப்படுமே' என்று. கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டு நீதிமான்களாகிய நாம், செய்கிற பாவத்திற்கு இந்த பூமியில் சரிகட்டப்படும். ஆகவே, பாவத்தை அறிக்கையிடுகிறது நல்லது, ஆனால், அதைவிட நல்லது, பாவம் செய்யாமல் இருப்பதே!
கர்த்தருடைய வருகை மிகவும் சமீபமாய் இருப்பதால், பரிசுத்தமாய் கர்த்தரை நோக்கி முன்னேறுவோம். பாவம் செய்து அதன் பலன்களை அனுபவிப்பதை பார்க்கிலும், பாவம் செய்யாமல் இருப்பதையே தெரிந்து கொண்டு அதன்படி வாழ தேவன் தாமே நம் ஒவ்வொருவருக்கும் கிருபை செய்வாராக!
நான் பாவி தான் இரங்குவீர்
அணைத்து காத்து இரட்சிப்பீர்
அருளாம் செல்வம் அளிப்பீர்
என் மீட்பரே வந்தேன் வந்தேன்
ஜெபம்: எங்களை அதிகமாய் நேசிக்கிற நல்ல தகப்பனே, இந்த நாளுக்காக உமக்கு நன்றி ஐயா. நாங்கள் எங்கள் பாவங்களை அறிக்கையிடும்போது அவைகளை மன்னித்து மறக்கிற நல்ல தகப்பனே உமக்கு நன்றி. ஆனால் பாவத்தின் விளைவுகளை நாங்கள் சந்திக்க வேண்டி இருப்பதால், அவைகளை நாங்கள் செய்யாதபடி எங்களை காத்து கொள்ள கிருபை தாரும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

Wednesday, January 13, 2010
13-01-2010 – நடப்பதெல்லாம் நன்மைக்கே.(Nadapadhellaam Nanmaikey)
13th January 2010 - Wednesday
ஜனவரி மாதம் 13-ம் தேதி – புதன் கிழமை
நடப்பதெல்லாம் நன்மைக்கே
அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். - (ரோமர் 8:28).
ஒரு அரச அரண்மனையில் ஒரு மந்திரி இருநதார். அவர் எப்போதும் என்ன நடந்தாலும் 'எல்லாம் நன்மைக்கே' என்று கூறுவார். ஒரு முறை அந்த நாட்டின் அரசர், 'நீங்கள் என்ன எப்போதும் எல்லாம் நன்மைக்கே என்று கூறுகிறீர்கள்?' என்று கேட்டார். அதற்கு அவர், 'ஆம் நமது நன்மைக்கே எல்லாம் நடக்கிறது' என்று கூறினார். அதன்பின் இருவரும் வேட்டைக்காக காட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அரசர்; தன் வில்லை எய்யும்போது, தவறுதலாக அவர் விரலின் மேல் பட்டு, விரல் வெட்டுப்பட்டது. அப்போதும் அந்த மந்திரி, 'எல்லாம் நன்மைக்கே' என்று கூறினார். அதை கேட்ட அந்த அரசருக்கு கோபம் வந்தது, 'நான் என் கை வெட்டுப்பட்டு துடிக்கிறேன், நீர் என்ன இதுவும் நன்மைக்கே என்று கூறுகிறீர்' என்று கோபத்தோடு கூறி அவரை சிறையில் அடைத்தார். அப்போதும் அந்த மந்திரி 'எல்லாம் நன்மைக்கே' என்று கூறினார்.
சில நாட்கள் கழித்து, அந்த அரசர் மீண்டும் வேட்டைக்கு செல்லும்போது, கானகத்தில் வெகு தூரம் சென்று விட்டார். அவரை அங்கிருந்த காட்டுமிராண்டிகள் பிடித்து கொண்டுபோய் தங்கள் கடவுளுக்கு பலி செலுத்த இழுத்து கொண்டு போனார்கள். பலி செலுத்தும் அந்நேரத்தில் அவர் விரலிலிருந்த காயத்தை பார்த்துவிட்டு, 'ஓ, பழுதான பலிகளை எங்கள் கடவுளுக்கு செலுத்த கூடாது' என்று கூறி அந்த அரசரை விடுதலை செய்து விட்டுவிட்டார்கள். அந்த அரசர் விடுதலையானதும் நேரே சிறைசாலைக்கு போய், அந்த மந்திரியை விடுவித்து, 'நீங்கள் சொன்னது சரிதான், என் கையில் வெட்டுபட்டது நன்மைக்குதான். இல்லாவிட்டால் நான் நரபலியாகி இருப்பேன். சரி, நான் வெட்டுப்பட்டது நல்லதுதான். ஆனால் நீங்கள் அநியாயமாய் சிறையில் போடப்பட்ட போதும் எல்லாம் நன்மைக்கே என்று கூறினீர்களே, நீங்கள் சிறையில் இருந்தது எந்தவிதத்தில் நன்மை?' என்று கேட்ட போது, அந்த மந்திரி சொன்னார், 'நல்லவேளை நான் சிறையில் இருந்தேன், இல்லாவிட்டால், நான் உங்களோடு வேட்டைக்கு வந்திருப்பேன். உங்களுக்கு பதிலாக என்னை நரபலி செலுத்தி இருப்பார்கள்' என்று கூறினார்.
அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம் என்று வேதம் கூறுகிறது. அவருடைய தீர்மானத்தின்படி அவருடைய பிள்ளைகளாய் இருக்கும் ஒவ்வொருவருக்கும், அவரிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்கும் சகலமும் ந்னமைக்கேதுவாகவே நடக்கிறது. சகலமும் என்று சொல்லும்போது, அது நன்மையான காரியங்களாய் இருக்கலாம், அல்லது தீமையான காரியங்களாய் இருக்கலாம், ஒருவேளை சந்தோஷமோ, துக்கமோ, இனிமையானதோ, கசப்பானதோ, எளிமையானதோ, கஷ்டமானதோ, சௌக்கியமானதோ, துன்பப்படுதலோ, வாழ்வோ, சாவோ எதுவாயிருந்தாலும் கர்த்தரிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்கு எல்லாம் நன்மைக்கேதுவாகவே நடக்கிறது. சிலவேளை நாம் நம் வாழ்வில் வரும் துன்பமான காரியங்களை வைத்து, தேவனுக்கு என்மேல் அன்பேயில்லை, நான் ஏன் இந்த பாடுகள் பட வேண்டும் என்று புலம்பலாம். ஒருவேளை உங்கள் வேலையிடத்தில் நீங்கள் பாடுகளை சந்திக்க நேரலாம். உங்கள் குடும்பத்தில் வரும் பாடுகளினாலே நீங்கள் சோர்ந்து போயிருக்கலாம். ஆனால் ஒன்றை மனதில் வைத்து கொள்ளுங்கள். கர்த்தரிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கேதுவாகவே நடக்கிறது.
யோசேப்பின் சகோதரர் கள்ளமில்லாத அந்த வாலிபனை, கொடிய குழியில் போட்டு அவனை கொல்ல நினைத்து, பின் அந்த பக்கமாய் எகிப்திற்கு தங்களுடைய சரக்குகளை விற்க சென்ற இஸ்மவேலரிடம் விற்று, அவர்கள் அவனை எகிப்தியன் ஒருவனுக்கு விற்றார்கள். அவன் அங்கு அநேக பாடுகள் பட்டு, பின் தேவனால் உயர்த்தப்பட்டு, பார்வோனுக்கு அடுத்த அதிகாரத்தில் இருக்கும்போது அவனுடைய சகோதரர்கள், அவனிடம் அவன்தான் யோசேப்பு என்று அறியாமல், அவனிடம் தங்கள் பஞ்சத்திற்காக தானியம் வாங்க எகிப்திற்கு சென்று அவனோடு பேசி கொண்டிருக்கையில், 'யோசேப்பு தன் சகோதரரை நோக்கி: என் கிட்ட வாருங்கள் என்றான். அவர்கள் கிட்டப்போனார்கள்; அப்பொழுது அவன்: நீங்கள் எகிப்துக்குப் போகிறவர்களிடத்தில் விற்றுப்போட்ட உங்கள் சகோதரனாகிய யோசேப்பு நான்தான். என்னை இவ்விடத்தில் வரும்படி விற்றுப்போட்டதினால், நீங்கள் சஞ்சலப்படவேண்டாம்; அது உங்களுக்கு விசனமாயிருக்கவும் வேண்டாம்; ஜீவரட்சணை செய்யும்படிக்குத் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார்' - (ஆதியாகமம் 45:4,5) என்று கூறுவதை காண்கிறோம். ஒருவேளை யோசேப்பின் சகோதரர் அவனை இஸ்மவேலரிடம் விற்றபோது, தன் எதிர்காலம், தன் கனவுகள் எல்லாம் அழிந்து போனது என்று யோசேப்பு நினைத்திருக்கலாம். இனி எனக்கு வாழ்வேது என்று நினைத்திருக்கலாம். ஆனால் ஒருநாள் வந்தது, அவன் எகிப்து முழுவதற்கும் அதிகாரியாக மாறி, தன் குடும்பத்தையும் தேசத்தையும் இரட்சிக்கும்படி தேவன் அவனை முன்பே அனுப்பினார் என்பதை அவன் அறிந்து இந்த வார்த்தைகளை தன் சகோதரரிடத்தில் கூறினான். தீமையையும் நன்மையாக மாற்றும் தேவன் நம் தேவன். ஆமென் அல்லேலூயா!
நீங்கள் இப்போது படும் பாடுகள் எல்லாம் ஒருநாள் நன்மையாக மாறுவதை காண்பீர்கள். இப்போது நாம் அதை உணராவிட்டாலும், பின் அதை அறியும்படி தேவன் கிருபை செய்வார். ஆகையால் மனம் தளராதிருங்கள். சோர்ந்து போகாதிருங்கள். நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று கர்த்தரிடம் எல்லாவற்றையும் ஒப்புகொடுத்துவிட்டு, அவருடைய செயலுக்காக காத்திருங்கள். கர்த்தர் எல்லாவற்றையும் நன்மையாக மாற்றுவார்.
எல்லாம் நன்மையாக
என் இயேசு மாற்றிடுவார்
தாங்கொண்ணா துன்ப துயரங்கள்
தவிக்க வைக்கும் சூழ்நிலைகள்
எல்லாம் நன்மையாக
என் இயேசு மாற்றிடுவார்
ஜெபம்: எல்லாவற்றையும் நன்மையாக மாற்றி தரும் எங்கள் நல்ல தகப்பனே, உம்மை துதிக்கிறோம். எங்கள் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு துன்பமான அல்லது தீமையான காரியங்களையும் உம்மிடத்தில் அன்பு கூரும் எங்களுக்கு நன்மையாக மாற்றுவதற்காக உமக்கு ஸ்தோத்திரம். இந்த வார்த்தைகளினாலே நீர் எங்களை ஆறுதல் படுத்துவதற்காக உமக்கு நன்றி. எங்கள் பாடுகளில் எங்களுடைய துக்கங்களில் நீர் எல்லாவற்றையும் நன்மையாக மாற்றுவீர் என்ற விசுவாசத்தை எங்கள் இருதயங்களில் ஆழமாய் பதிய வைத்தருளும். நாங்கள் சோர்ந்து போகாதபடி நீர் எங்கள் விசுவாசத்தை கட்டி எழுப்புவீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

Tuesday, January 12, 2010
12-01-2010 – நீயோ கடன் வாங்காதிருப்பாய்
12th January 2010 - Tuesday
ஜனவரி மாதம் 12-ம் தேதி – செவ்வாய் கிழமை
நீயோ கடன் வாங்காதிருப்பாய்
ஏற்றகாலத்தில் உன் தேசத்திலே மழை பெய்யவும், நீ கையிட்டுச்செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிக்கவும், கர்த்தர் உனக்குத் தமது நல்ல பொக்கிஷசாலையாகிய வானத்தைத் திறப்பார்; நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன்கொடுப்பாய், நீயோ கடன் வாங்காதிருப்பாய். - (உபாகமம் 28:12).
ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் மனைவியும் நல்ல வேலையில் இருந்தார்கள். அவர்களுக்கு நான்கு பிள்ளைகள் உண்டு. தந்தை ஆலயத்தில் பெரிய டீக்கன். பாடல்களை இயற்றி, கிறிஸ்மஸ் மற்றும் விழாக்காலங்களில் ஒரு குழுவாக சேர்ந்து கர்த்தருக்கு ஊழியம் செய்வார்கள்.
ஆனால் அந்த தகப்பனுக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தது. அது அவர் சம்பாதிக்கும் சம்பளத்திற்கு போதுமானதாக இல்லை. ஆகவே பக்கத்தில் இருக்கும் கடையில் கடனுக்கு வாங்கி குடிக்க ஆரம்பித்தார். ஆரம்பத்தில் மனைவி சண்டையிட்டு நிறுத்த பார்த்தார்கள். ஆனால் அந்த பழக்கத்தை நிறுத்த முடியவில்லை. கடனாக வாங்கியதை கொடுக்க முடியாத நிலை. அதற்காக வேறொரு கடையில் கடன் வாங்கி, இப்படி ஒரு முறை கடன் வாங்கி ருசித்த பின்பு, சுற்றிலும் இருக்கிற கடைகளில் கடன். அதை அடைக்க வேறொரு மக்களிடம் கடன், அதை அடைக்க சேட்டுகளிடம் கடன் என்று ஏகப்பட்ட கடன். ஊரிலே தலைநிமிர்ந்து நடக்க முடியாத நிலை. காலை ஆறு மணிக்கு, சேட் தன் மோட்டார் பைக்கில் அந்த தெருவே கேட்கும்படி கடன் கேட்க வருவான். கொடுக்க முடியவில்லை என்றதும், நாலு பேருக்கு கேட்கும்படியாக, சத்தம் போடுவான். இவர்கள் கிறிஸ்தவர்கள். மற்ற புறஜாதியார் மத்தியில் எத்தனை அவமானம்! கடைசியில் அந்த தகப்பன், ஆலயத்தில் பெரிய பதவியில் இருந்தவர், அநேக தாலந்துகளை உடையவர், ஆலயத்தில் இசை கருவிகளை வாசித்தவர், விஷ மருந்து குடித்து மரித்து போனார். அவருடைய மனைவி, நான்கு குழந்தைகளையும் எல்லா இடத்திலும் கடன் வாங்கி, அநாதையாக நடுத்தெருவில் விட்டுவிட்டு போய்சேர்ந்தார். என்ன ஒரு பரிதாபம்!
இன்று கிறிஸ்தவர்கள் என்று சொல்லி கொண்டிருக்கும் அநேகருடைய நிலைமை இதுதான்! கர்த்தருடைய வாக்குதத்தம் எல்லாம், ஆம் என்றும் ஆமென் என்றும் இருப்பது உண்மைதான். என்றாலும், இந்த கிறஸ்தவ குடும்பத்தில் அந்த வாக்குதத்தங்கள் பிரயோஜனப்படவில்லையே! ஏன், அதை அவர்கள் உரிமை பாராட்டி கொள்ளவில்லை. தங்கள் தேவன் யார் என்று அவர்கள் அறியவில்லை. தங்கள் இஷ்டத்திற்கு வாழ்ந்தார்கள். கர்த்தருடைய ஊழியத்தை செய்தார்கள், ஆனால், பேருக்கும் புகழுக்கும் செய்தார்களே ஒழிய, கிறிஸ்து அவர்கள் உள்ளத்தில் பிறக்கவேயில்லை! எத்தனை பரிதாபம்!
நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்குச் செவிகொடுக்கும்போது, இப்பொழுது சொல்லப்படும் ஆசீர்வாதங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்குப் பலிக்கும் (உபாகமம் - 28:2) என்று வேதம் திட்டவட்டமாக கூறுகிறது. கர்த்தருடைய சத்தத்திற்கு செவிகொடுத்தால் நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன்கொடுப்பாய், நீயோ கடன் வாங்காதிருப்பாய். நீ கர்த்தருடைய சத்தத்திற்கு செவிகொடுக்காமல் போனால், நீ அநேகம் ஜாதிகளிடம் கடன் வாங்குவாய், அதை கொடுக்க உன்னால் முடியாமல் போகும். அந்த கிறிஸ்தவ தகபபனுக்கு கர்த்தர் எத்தனையோ முறை எச்சரித்திருப்பார், ஆனால் அவரோ செவிடன் காதில் ஊதிய சங்கு போல அதை கேட்காமல், தன் சுயநலத்திற்காக, சுய இன்பத்திற்காக சிகரெட்டுகளை வாங்கி ஊதி தள்ளினார். உன் நடுவிலிருக்கிற அந்நியன் உனக்கு மேற்பட்டு மேன்மேலும் உயர்ந்திருப்பான்; நீ மிகவும் தாழ்த்தப்பட்டுப்போவாய். அவன் உன்னிடத்தில் கடன்படான், நீ அவனிடத்தில் கடன்படுவாய்; அவன் தலைவனாயிருப்பான்; நீ வாலாயிருப்பாய் (உபாகமம் - 28:43,44) என்ற கர்த்தரின் சாபம் அவருடைய வாழ்க்கையில் பலித்தது.
அன்பு சகோதரனே, சகோதரியே, உன் சுய இன்பத்திற்காக, உன் இச்சைகள் நிறைவேற வேண்டுமென்பதற்காக, கடன் மேல் கடன் வாங்கி கொண்டிருக்கிறீர்களோ? உன் குடும்பத்தை கண்ணீரில் மிதக்க விட்டு கொண்டிருக்கிறிக்கிறீர்களோ? இன்று கர்த்தர் உனக்கு கொடுக்கும் எச்சரிப்பின் சத்தத்தை கேட்பாயாக! உன் பொல்லாத வழிகளை விட்டு திரும்பி விடு. கர்;த்தரிடம் தஞ்சம் புகுந்து விடு, அப்போது அவர் நீ கையிட்டு செய்யும் காரியங்களை எல்லாம் ஆசீர்வதிப்பார்;.
ஒரு சிலர், தங்கள் பெற்றோரை சந்தோஷபடுத்த வேண்டி, தங்களுடைய திராணிக்கு மேலாக அவர்களுக்கு கொடுத்து, பழக்கபடுத்துவார்கள். பெற்றோருக்கு கொடுப்பதை நான் ஒரு நாளும் தடுக்க மாட்டேன். வயதான பெற்றோரை தாங்குவது நமது கடமை. அதை செய்யாவிட்டால் கர்த்தரின் சாபம் நம்மேல் வரும். ஆனால் மகனோ, மகளோ வெளிநாட்டில் சம்பாதிக்கிறார்கள் என்று இங்கு சுகபோகமாய், தங்கள் சுய இச்சைகைளுக்காய், பிள்ளைகள் கஷ்டப்பட்டு சம்பாதித்து தங்களுக்கு அனுப்பும்; பணத்தை வீணாய் விரயம் செய்யும் பெற்றோர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்களுடைய ஆசை இச்சையை தீர்ப்பதற்காக, இந்த மகள், அல்லது மகன் பணத்தை அனுப்புவார்கள். சிலவேளை முடியாதபோது மற்றவர்களிடம் கடன் வாங்கி அவர்களுக்கு அனுப்புவது எந்த வகையில் நியாயம்? ஞானமாய் சில காரியங்களை செய்ய வேண்டும். ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றென்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள் (ரோமர் 13:8) என்று வேதம் நம்மை எச்சரிக்கின்றது. கடனை வாங்கி பழக்கப்படாதிருங்கள். ஒருமுறை வாங்கினால் திரும்ப திரும்ப வாங்க தோன்றும். அதனுடைய முடிவோ விபரீதம்! அது ஒரு பொல்லாத வியாதி! ஆந்த வியாதியில் சிக்கி விடாதீர்கள்!
கர்த்தருக்கு கொடுங்கள். உங்கள் இயலாமையிலிருந்து கர்த்தருக்கு கொடுத்து பாருங்கள்! கர்த்தர் வானத்தின் பலகணிகளை திறந்து உங்களை ஆசீர்வதிப்பதை காண்பீர்கள். கர்த்தருக்கு கொடுக்கிறவர்கள் யாரும் மற்றவர் முன் தலைகுனிந்து நிற்க மாட்டார்கள். உங்களை கடனே இல்லாமல் கர்த்தர் அதிசயமாய் வழிநடத்துவார். உங்கள் தேவைகளை அதிசயமாய் சந்திப்பார். நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன்கொடுப்பாய், நீயோ கடன் வாங்காதிருப்பாய். ஆமென்! அல்லேலூயா!
சிங்க குட்டிகள் பட்டினி கிடக்கும்
ஆண்டவரை தேடுவோர்க்கு குறையில்லையே
குறையில்லையே ஆண்டவரை தேடுவோர்க்கு
குறையில்லையே
ஜெபம்: எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, உம்முடைய வாக்குதத்தங்கள் எங்கள் வாழ்க்கையில் நிறைவேறும்படியாக எங்கள் வாழ்க்கை எல்லாவிதத்திலும் உமக்கு பிரியமானதாக இருக்க கிருபை செய்யும். நீயோ அநேக ஜாதிகளுக்கு கடன் கொடுப்பாய், நீயோ கடன் வாங்காதிருப்பாய் என்கிற வாக்குதத்தம் எங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் நிறைவேறுவதாக. கடன் வாங்கி கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் ஒவ்வொருவரையும், அதிலிருந்து அவர்கள் வெளியேற தேவன் கிருபை செய்வீராக. உமக்கு கொடுத்து, அதனால் வரும் ஆசீர்வாதங்களை அளவில்லாமல் பெற்று கொள்ள தேவன் அவர்களுக்கு உணர்த்துவீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

Monday, January 11, 2010
11-01-2010 – ஒருவரும் விரும்பாத மனிதன்
11th January 2010 - Monday ஜனவரி மாதம் 11-ம் தேதி – திங்கள் கிழமை ஒருவரும் விரும்பாத மனிதன் யோராம் ராஜாவாகிறபோது முப்பத்திரண்டு வயதாயிருந்து, எட்டு வருஷம் எருசலேமில் அரசாண்டு, விரும்புவாரில்லாமல் இறந்துபோனான்; அவனைத் தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள்; ஆனாலும் ராஜாக்களின் கல்லறைகளில் அவனை வைக்கவில்லை. - (2 நாளாகமம் 21:20). ஒரு நண்பர் சமீபத்தில் தன்னுடைய மூத்த சகோதரன் மரித்து போனதாக கூறினார். நான் அவரிடம், 'ஐயோ எனக்கு தெரியாதே' என்று கூறினேன். அப்போது அவர் சொன்னார், 'நாங்கள் யாரிடமும் இதை அறிவிக்கவில்லை. அவர் உயிர் வாழ்ந்த காலத்தில் யாரையும் மதிக்கவில்லை, கவனிக்கவில்லை. இப்போது அவர் மரித்த போது யாரும் அவரை கண்டு கொள்ளவில்லை' என்றார். என்ன ஒரு பரிதாபமான சாவு! வேதத்தில் இராஜாவாகிய யோராம் அப்படிதான் வாழ்ந்தான். அவன் ஆட்சிக்கு வந்தவுடன் தன் சகோதரர் யாவரையும் கொன்று போட்டான். 'யோராம் தன் தகப்பனுடைய ராஜ்யபாரத்திற்கு வந்து தன்னைப் பலப்படுத்திக்கொண்டபின்பு, அவன் தன்னுடைய சகோதரர் எல்லாரையும் இஸ்ரவேலின் பிரபுக்களில் சிலரையும் பட்டயத்தால் கொன்றுபோட்டான்' (2 நாளாகமம் 21:4). மட்டுமல்ல, அவன் யூதாவுடைய மலைகளின்மேல் மேடைகளை உண்டாக்கி, எருசலேமின் குடிகளைச் சோரம்போகப்பண்ணி, யூதாவையும் அதற்கு ஏவிவிட்டான். உண்மையான தேவனை விட்டு வழிவிலக செய்து, பாகால்களை வணங்கும்படி செய்தான். அவன் அரசாண்ட வருஷங்கள் மிகவும் மோசமானதாக, துன்பம் நிறைந்ததாக இருந்ததுடன், அவனுக்கு உண்டான நோயினால் அவன் குடல்கள் சரிந்து கொடிய வியாதியினால் செத்துப்போனான். என்ன ஒரு பரிதாபமான நிலைமை! அதைவிட பரிதாபம், அவன் ராஜாவாகிறபோது முப்பத்திரண்டு வயதாயிருந்து, எட்டு வருஷம் எருசலேமில் அரசாண்டு, விரும்புவாரில்லாமல் இறந்துபோனான் என்று வேதம் கூறுகிறது. அவனை விரும்புவாரில்லாமல், தனிமையாக, மிகுந்த வேதனையோடு மரித்தான். ஏன் இந்த நிலைமை? அவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான் என்று வேதம் கூறுகிறது. அவன் தன்னையே முக்கியப்படுத்தி, தேவனுடைய கற்பனைகளை மீறி நடந்து, தான்தான் இராஜா என்று தேவனையும் மனிதரையும் மதியாதாபடி வாழ்ந்தபடியால் இந்த சோக முடிவு அவனுக்கு ஏற்பட்டது. நாம் நம் வாழ்வில் கர்த்தரை முதலிடமாக வைத்திருக்கிறோமா? சிலர் கையில் பணம் வந்தவுடன், அவர்களுடைய நடையே மாறிவிடும், பேச்சே மாறிவிடும், மற்றவர்களை மதிக்க மாட்டார்கள். தாங்கள் இந்த உலகத்தையே ஆளுவதாக மனதில் ஒரு பெருமை வந்துவிடும். நாம் மரிக்கும்போது நம்மை குறித்து நன்மையான காரியங்களை கூறும்படி நாம் வாழ்க்கை வாழ்கிறோமா? இல்லாவிட்டால், அப்பாடா, போனான், உலகத்திற்கே பாரமாக இருந்தான். போனது நல்லது என்று கூறும்படி வாழ்கிறோமா? நாம் வாழும்போது, கர்த்தருக்கு பிரியமான, மற்றவர்களுக்கு பிரயோஜனமான ஒரு வாழ்க்கையை வாழும்போது, நாம் மரிக்கும்போது மற்றவர்களால் ஐயோ இவர்கள் போய் விட்டார்களே, என்று கண்ணீர் விடும் நிலைமை ஏற்படும். ஒருவர் மரிக்கும்போதுதான் அவர்களுடைய உண்மையான வாழ்வு மற்றவர்களுக்கு தெரியும். என்கூட வேலை செய்யும் ஒருவர், 'இவர் மரித்தாரே, இவரை குறித்த எனக்கு நினைவு வரும்போதெல்லாம் நான் இப்படிப்பட்ட நண்பரை கொடுத்தாரே என்று கடவுளை துதிக்கிறேன். ஆனால் மற்ற மனிதரை பார்க்கும்போது, ஏன் இந்த மனிதர் இன்னும் உலகத்தில் இருக்கிறார் என்று நினைக்கிறேன்' என்று கூறினார். நாம் வாழ்வது ஒருமுறைதான். அந்த வாழ்க்கையை தேவனுக்கு பிரியமுள்ளதாக வாழ்வதற்கு முயற்சிப்போம். மற்றவர்கள் கர்த்தரை துதிக்கும் அளவு நம்முடைய வாழ்க்கை இருக்கட்டும். தேவனே அவரை எடுத்துக் கொள்ளும் என்று முறையிடாதபடி நம் வாழ்க்கை அமையட்டும். வாழும் வாழ்க்கை ஒருமுறைதான் வாழ்ந்திடுவோம் நாமும்வானவர் இயேசுவுக்கு பிரியமாகவாழுகின்ற மற்றவர்க்கு பிரயோஜனமாக -சீர்வாழ்வு வாழ்ந்திட உங்களை வாழ்த்துகிறேன் ஜெபம்: எங்களை நேசிக்கிற நல்ல தகப்பனே, நீர் பிரியப்படும் வாழ்க்கை வாழவும், மற்றவர்கள் விரும்பும் வாழ்க்கை வாழவும் கிருபை செய்யும். இந்த உலகத்தில் நாங்க்ள கொண்டு வந்தது ஒன்றுமில்லை, கொண்டு போவதும் ஒன்றுமில்லை. ஆனால் எங்களை குறித்த நல்ல நினைவுகளை மற்றவர்களுக்கு நாங்கள் விட்டு செல்லதக்கதாக எங்கள் வாழ்க்கை அமைய கிருபை செய்வீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென். இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. கர்த்தரின் பணியில்அனுதின மன்னா குழுSend all your Query / Reply to :anudhinamanna@gmail.com
Sunday, January 10, 2010
10-01-2010 – மன்னிக்கும் மனப்பான்மை
10th January 2010 - Sunday
ஜனவரி மாதம் 10-ம் தேதி – ஞாயிற்று கிழமை
மன்னிக்கும் மனப்பான்மை
நீங்கள் ஒருவரையொருவர் கடித்துப்பட்சித்தீர்களானால் அழிவீர்கள், அப்படி ஒருவராலொருவர் அழிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். - (கலாத்தியர். - 5:15).
ஜெர்மன் நாட்டில் போபன்ஷோசன் என்ற இடத்தில் பழங்கால மடாலயம் ஒன்றுண்டு. இன்று அது சுற்றுலா பயணிகள் வந்து போகும் இடமாக உளளது. இங்குள்ள ஒரு அறையில் மான் கொம்புகள் இரண்டு ஜோடி இருப்பதை காணலாம். ஓன்றோடென்று பின்னப்பட்ட இரண்டு ஜோடி மான் கொம்புகள் இருப்பதைக் காணலாம். அநேக ஆண்டுகளுக்கு முன்பு ஒரு காட்டுப்பகுதியில் கிடைக்க பெற்றன. அநேகமாக இரண்டு மான்கள் ஒன்றோடொன்று முட்டி சண்டையிட்டபோது பிரிக்க முடியாதபடி கொம்புகள் சிக்கி கொண்டிருக்க கூடும். பின்பு சிக்கிய நிலையில் புல் மேயாதபடி தண்ணீர் குடிக்க முடியாதபடி அவ்விரண்டும் உயிர் இழந்திருக்க கூடும். அந்த மான்கள் கொஞ்சம் விட்டு கொடுத்து இரண்டும் சேர்ந்து புல் மேயவும், தண்ணீர் குடிக்கவும் முயற்சித்திருக்குமானால், ஒரு வேளை உயிர் பிழைத்திருக்கலாம். ஏன் கொம்புகளின் சிக்குண்ட நிலை கூட விடுபட்டிருக்கலாம். ஆனால் பரிதாபம் அவை மரித்து போயின.
இந்த மான்கள் இரண்டும் முட்டி மோதி சிக்குண்டு அழிந்தது போல இன்றைய சமுதாயத்தில் மனிதர்களுக்குள்ளும் இப்படிப்பட்ட சம்பவங்களை பார்க்கிறோம். பள்ளிகளில் மாணவர்களுக்குள் பிரச்சனை, தொழிற்சாலைகளில் வேலை செய்வோர்களுக்குள் பிரச்சனை, வீட்டிற்குள் கணவன் மனைவி, பிள்ளைகளுக்குள் பிரச்சனை என்று அடுக்கிகொண்டே போகலாம். இப்படி பிரச்சனை உருவாகும்போது, ஒருவர் மற்றவரை மன்னிக்க முடியாமல் கோபமும், சண்டைகளும் எழுகின்றன. அந்த சண்டை சச்சரவுகள் ஓய்ந்த பின்பும் ஒருவரையொருவர் மன்னிக்க முடியாமல் கசப்பிலே தங்கள் வாழ்க்கையை கழிக்கின்றனர்.
இப்படி இரு நபர்களுக்குள் கசப்புகள் இருக்கும்போது, ஒருவர் மற்றவர் தன்னிடம் வந்து மன்னிப்பு கேட்கவேண்டுமென்று எதிர்பார்த்து காலத்தை கசப்புடனே கழிக்கின்றனர். இச்செய்தியை வாசிக்கும் அருமையானவர்களே, உங்களுக்கும் மற்ற யாருடனாவது பிரச்சனை பிரிவினை உண்டா? அந்த மான்களின் நிலையைப் போல நீங்களும் வாழ்க்கையில் சிக்குண்டு சமாதானத்தை இழந்து காணப்படுகிறீர்களா? இதற்கு ஒரு தீர்வு உண்டு. அது என்ன? பாதிக்கப்பட்ட நீங்கள் முதலாவது சென்று மற்ற நபரிடம் மன்னிப்பு கேட்டு பாருங்களேன். நீங்கள் ஒப்புரவாக விரும்புவது போல அந்த நபரும் ஒப்புரவாக வாஞ்சையாயிருப்பதை கண்டு நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். ஒருவேளை அந்த நபர் சமாதானத்திற்கு உடன்பட மறுத்தாலும் அவரிடம் தாழ்ந்து போனதினால் உங்கள் இருதயம்; சமாதானத்தினால் நிரம்பும். பிறர் குற்றத்தை நான் மன்னித்தது போல ஆண்டவரே என்னையும் மன்னியும் என்று தைரியமாய் தேவனை நோக்கி ஜெபிக்கலாம். கொஞ்சகாலம் வாழப்போகும் இந்த பூமியில் பிறர் மேல் உள்ள கசப்புணர்வுகளை களைந்து மனதார மன்னித்து சமாதானத்தோடு வாழ பிரயாசமெடுப்போம்.
வேதாகமத்தில் இரு சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சனை எப்படி தீர்ந்தது என்று பார்ப்போம். யாக்கோபு தன் சகோதரன் ஏசாவையும், தன்தகப்பனையும் ஏமாற்றி, ஆசீர்வாதங்களை பெற்றுக் கொண்டு, தன் மாமனாகிய லாபானிடத்திற்கு ஓடி, அங்கு இருபது வருஷம் இருந்து விட்டு திரும்ப வீடு திரும்பும் நேரத்தில், தன் சகோதரனாகிய ஏசா தன்னை என்ன செய்வானோ என்று பயந்தவனாக செல்லும் நேரத்தில், 'என் சகோதரனாகிய ஏசாவின் கைக்கு என்னைத் தப்புவியும், அவன் வந்து என்னையும் பிள்ளைகளையும் தாய்மார்களையும் முறிய அடிப்பான் என்று அவனுக்கு நான் பயந்திருக்கிறேன்' என்று கர்த்தரிடம் பாதுகாவலை கேட்டு ஜெபித்து, 'அன்று ராத்திரி அவன் அங்கே தங்கி, தன் கைக்கு உதவினவைகளிலே தன் சகோதரனாகிய ஏசாவுக்கு வெகுமானமாக, இருநூறு வெள்ளாடுகளையும், இருபது வெள்ளாட்டுக் கடாக்களையும், இருநூறு செம்மறியாடுகளையும், இருபது ஆட்டுக்கடாக்களையும், பால் கொடுக்கிற முப்பது ஒட்டகங்களையும், அவைகளின் குட்டிகளையும், நாற்பது கடாரிகளையும், பத்துக் காளைகளையும், இருபது கோளிகைக் கழுதைகளையும், பத்துக் கழுதைக்குட்டிகளையும் பிரித்தெடுத்து, தன் வேலைக்காரனிடத்தில் கொடுத்து, இது உமது அடியானாகிய யாக்கோபுடையது; இது என் ஆண்டவனாகிய ஏசாவுக்கு அனுப்பப்படுகிற வெகுமதி; இதோ, அவனும் எங்கள் பின்னே வருகிறான் என்று சொல்' என்றான். பின்னர் அவன் ஏசாவை கண்டபோது, தான் தன் பிள்ளைகள், மனைவிகளுக்கு முன்னாக நடந்துபோய், ஏழுவிசை தரைமட்டும் குனிந்து வணங்கி, தன் சகோதரன் கிட்டச் சேர்ந்தான். அப்பொழுது ஏசா எதிர்கொண்டு ஓடிவந்து, அவனைத் தழுவி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்; இருவரும் அழுதார்கள் (ஆதியாகமம் 32-33). இருவரும் ஒருவரையொருவர் மன்னித்து, சந்தோஷமாய் தங்கள் இடங்களுக்கு திரும்பி போனார்கள் என்று பார்க்கிறோம். ஒருவேளை ஏசா யாக்கோபை மன்னியாதிருந்திருந்தால், அந்த இடத்திலே தானே, யாக்கோபின் கோத்திரம் அழிந்திருக்கும். இஸ்ரவேலின் சந்ததி இல்லாமல் போயிருந்திருக்கும், கிறிஸ்து உலகிலே தோன்றாதபடி தடை ஏற்பட்டிருக்கும். தேவன் அப்படி நேரிடாதபடி, ஏசா யாக்கோபை மன்னிக்க கிருபை செய்தார்.
நீங்கள் ஒருவரையொருவர் கடித்துப்பட்சித்தீர்களானால் அழிவீர்கள், அப்படி ஒருவராலொருவர் அழிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். ஆனால் ஒருவரையொருவர் மன்னித்து வாழ்ந்தால், நிச்சயமாகவே செழிப்பீர்கள். நாம் ஒருவரையொருவர் மன்னித்து, சந்தோஷமாய் வாழ தேவன் தாமே கிருபை செய்வாராக!
சகலமும் தாங்கும் சகலமும் நம்பும்
மிகைபட வென்றும் மேன்மை பெற்றோங்கும்
அன்பே பிரதானம் சகோதர
அன்பே பிரதானம்
ஜெபம்: எங்களை அதிகமாய் நேசித்து எங்கள் பாவங்களை மன்னித்து எங்களை உமது பிள்ளைகளாக்கின நல்ல தகப்பனே, உம்மை துதிக்கிறோம். நாங்கள் ஒருவரையொருவர் கடித்து பட்சிக்காதபடிக்கு, ஒருவர் பேரில் ஒருவருக்கு குறை உண்டானால், மற்றவர்களை மன்னிக்கும் மனப்பான்மையை எங்களுக்கு தருவீராக. கசப்பு உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காதபடி, மற்றவர்களை மன்னிக்க எங்களுக்கு உதவி செய்யும். தேவரீர் எங்களை மன்னித்ததை நினைவு கூர்ந்து, மற்றவர்களை மன்னிக்க உதவிசெய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

Friday – 08-01-2010 – தேவன் நமது பட்சம்
08th January 2010 - Friday
ஜனவரி மாதம் 08-ம் தேதி – வெள்ளி கிழமை
தேவன் நமது பட்சம்
தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?. - ( ரோமர் 8:31).
ஒரு கிறிஸ்தவ வாலிபன், புதிதாக ஒரு கம்பெனியில் இரவு வேலையில், ஒரு வேதாகம கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்று அவாவுடன், அந்த கம்பெனியில் சேர்ந்தான். அங்கு அவனோடு இருந்த மற்றவர்கள், அவனிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டார்கள். அவன் கிறிஸ்தவனாக இருந்தபடியால், அவனை எள்ளி நகையாடி, அவனை அவமானப்படுத்தி கொண்டிருந்தனர். ஓவ்வொரு இடைவேளை நேரம் வரும்போதும் அவனை அப்படி துன்பப்படுத்திகொண்டிருந்தனர்.
ஒரு நாள் இரவு மிகவும் அவனை கலாட்டா பண்ணி, அவனை பரியாசம் செய்து, இயேசுகிறிஸ்துவை பற்றியும் ஏதோதோ சொல்லி வம்புக்கிழுத்தனர். அப்போது அவன் மிகவும் மனம் நொந்து சே, போ! இந்த வேலையும் வேண்டாம்,
ஒன்றும் வேண்டாம் என்று தீர்மானித்து இருக்கையில், ஒரு வயதான மனிதர், 'போதும் அவனை வம்புக்கிழுத்தது, அவரவர் உங்கள் வேலைகளை பாருங்கள்' என்று சத்தமிட்டார். உடனே மற்றவர்கள் அவனை விட்டு பின்வாங்கி, தங்கள் வேலைகளுக்கு திரும்பினார்கள். பின்னர் அந்த வயதான மனிதர் அந்த வாலிபனிடம் சொன்னார், 'நீ மிகவும் துன்ப நேரத்தில் இருப்பதை பார்த்தேன். நான் உன்னுடன் உன் பக்கத்தில் இருக்கிறேன் என்பதை நீ அறியவே நான் அப்படி மற்றவர்களிடம் சொன்னேன்' என்று கூறினார்.
ஒருவேளை நீங்கள் வேலை செய்யும் இடத்தில் கிறிஸ்துவை அறியாத மற்றவர்கள் மத்தியில் நீங்கள் மாத்திரம் தனியாக இருக்கலாம். மற்றவர்கள் உங்களை கிண்டல் கேலி செய்யலாம். அவர்கள் அநேகராயிருப்பதால் அவர்கள் ஜெயிப்பார்கள் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். உங்களோடு துணையாக இருக்க வேறு ஒரு விசுவாசியை உங்களுக்கு தேவன் அனுப்பபுவார். அப்படி அனுப்பாவிட்டாலும்
, தேவனே உங்கள் பக்கத்தில் இருக்கிறார் என்பதை நீங்கள் ஒரு நாளும் மறக்ககூடாது. மட்டுமல்ல அவருடைய தூத சேனைகளும் உங்களோடு இருக்கிறார்கள் என்பதை நீங்கள் மறக்ககூடாது.
ஒரு முறை தேவ மனுஷனாகிய எலிசாவுக்கு விரோதமாக சீரியா ராஜா கோபங்கொண்டு அவரை கொல்லுவதற்கு 'அவன் அங்கே குதிரைகளையும் இரதங்களையும் பலத்த இராணுவத்தையும் அனுப்பினான்ளூ அவர்கள் இராக்காலத்திலே வந்து பட்டணத்தை வளைந்துகொண்டார்கள். தேவனுடைய மனுஷனின் வேலைக்காரன் அதிகாலமே எழுந்து வெளியே புறப்படுகையில், இதோ, இராணுவமும் குதிரைகளும் இரதங்களும் பட்டணத்தைச் சுற்றிக்கொண்டிருக்கக் கண்டான்; அப்பொழுது வேலைக்காரன் அவனை நோக்கி: ஐயோ, என் ஆண்டவனே, என்னசெய்வோம் என்றான். அதற்கு அவன்: பயப்படாதே; அவர்களோடிருக்கிறவர்களைப்பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம் என்றான். அப்பொழுது எலிசா விண்ணப்பம்பண்ணி: கர்த்தாவே, இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும் என்றான்
; உடனே கர்த்தர் அந்த வேலைக்காரன் கண்களைத் திறந்தார்; இதோ, எலிசாவைச்சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்' (2 இராஜாக்கள் 6:14-17) என்று பார்க்கிறோம். தேவன் தம்முடைய பிள்ளைகளுக்காக யுத்தம் செய்வதற்கு தம்முடைய தூத சேனைகளையே அனுப்பி அவர்களை விடுவிக்கிறார்.
நாம் இரட்சிக்கப்பட வேண்டும் என்பதற்காக தம்முடைய சொந்த குமாரனையே நமக்காக அனுப்பினவர், உங்களை தனியாக இருக்க விட்டுவிடுவாரா? ஒருபோதும் இல்லை! மனம் தளராதிருங்கள். நீங்கள் தனியே இல்லை. ஒரு முறை எலியா தீர்க்கதிரிசியும் அப்படிதான் சொன்னார்
, 'அதற்கு அவன்: சேனைகளின் தேவனாகிய கர்த்தருக்காக வெகு பக்திவைராக்கியமாயிருந்தேன்; இஸ்ரவேல் புத்திரர் உமது உடன்படிக்கையைத் தள்ளிவிட்டார்கள்; உம்முடைய பலிபீடங்களை இடித்து, உம்முடைய தீர்க்கதரிசிகளைப் பட்டயத்தினால் கொன்றுபோட்டார்கள், நான் ஒருவன்மாத்திரம் மீதியாயிருக்கிறேன்; என் பிராணனையும் வாங்கத் தேடுகிறார்கள் என்றான்' (1 இராஜாக்கள் 19:14). அப்போது தேவன் அவருக்கு சொன்னது, 'ஆனாலும் பாகாலுக்கு முடங்காதிருக்கிற முழங்கால்களையும், அவனை முத்தஞ்செய்யாதிருக்கிற வாய்களையுமுடைய ஏழாயிரம்பேரை இஸ்ரவேலிலே மீதியாக வைத்திருக்கிறேன்
' என்றார். - (1 இராஜாக்கள் 19:18). எலியா தீர்க்கதரிசி நினைத்தார், தான் மாத்திரம் தனியாக இருப்பதாக, தேவன் அவருக்கு வெளிப்படுத்தினார், 'நீ மாத்திரம் தனியாக இல்லையப்பா, இன்னும் ஏழாயிரம் பேர் உன்னோடு துணைக்கு இருக்கிறார்கள்' என்று அவரை தைரியப்படுத்தினார்.
அன்பு சகோதரனே சகோதரியே, நீங்கள் கிறிஸ்துவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்று கொண்டபின் ஒரு நாளும் நீங்கள் தனியாக இல்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள். 'இதோ,
உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்' என்று கூறிய இயேசுகிறிஸ்து நம்மோடு கூட எனறும் இருக்கிறார். மட்டுமல்ல, உங்களோடு தேவனும், பரலோகத்தின் முழு சேனையும் இருக்கிறார்கள் என்பதை எப்போதும் மனதில் கொள்ளுங்கள். நான் தனியாள், எனக்கு என்று யார் இருக்கிறார்கள் என்று ஒருபோதும் அதைரியப்படாதீர்கள். நீங்கள் வானத்தையும் பூமியையும் அண்ட சராசரத்தையும் படைத்த சர்வவல்லமையுள்ள தேவனின் பிள்ளை என்பதை ஒரு போதும் மறக்காதீர்கள். தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? ஆமென் அல்லேலூயா!
கர்த்தர் நம் சார்பில் இருக்கும்போது
நமக்கு எதிராய் நிற்பவன் யார்?
கர்த்தர் மேல் பாரத்தை வைத்துவிடு
கலங்கி தவிக்காதே
அவரே உன்னை ஆதரிப்பார்
அதிசயம் செய்வார்
ஜெபம்: எங்களை என்றும் தனியே விடாத எங்கள் நல்ல தகப்பனே, என்றென்றும் எங்களோடு இருப்பவரே உமக்கு ஸ்தோத்திரம். நீர் எங்களோடு இருக்கும்போது நாங்கள் எதை குறித்தும் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லையே. வானத்தின் சேனைகளும் எங்களோடு இருப்பதற்காக ஸ்தோத்திரம். எங்களுக்க விரோதமாக எழும்புகிறவர்களை நீர் எங்களுக்காக யுத்தம் செய்து எங்களை விடுவிக்கிறதற்காக உமக்கு நன்றி. நீர் எங்களோடு எப்போதும் இருக்கிறீர் என்று நீர் எங்களுக்கு கொடுத்த வாக்குதத்தத்திற்காக உமக்கு நன்றி. தனிமையை உணருகிற ஒவ்வொரு சகோதர சகோதரிகளையும் இந்த வார்த்தைகள் மூலம் ஆற்றி தேற்றுவீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.
கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு
Send all your Query / Reply to :
anudhinamanna@gmail.com
Tomorrow Saturday Anudhinamanna will not be posted. Our next issue will be on Sunday.

Thursday – 07-01-2010 – நடக்க சொல்லி தாரும்
07th January 2010 - Thursday
ஜனவரி மாதம் 07-ம் தேதி – வியாழக் கிழமை
நடக்க சொல்லி தாரும்
ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருக்கையில், காணப்படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டார்.
- (ஆதியாகமம் 5:24).
இந்நாட்கள்pல் நம் ஊர்களில், மக்கள் காலை நேரத்திலும் மற்றும் மாலை நேரங்களிலும் உடற்பயிற்சிக்காக நடப்பதை காணலாம். என்றுமில்லாத அளவு, மக்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருந்து, தினமும் சற்று தூரம் நடக்க வேண்டும் என்று தீர்மானித்து, நடக்கிறதை காண்கிறோம். கிராமங்களில் கூட இன்று மக்கள் கூட்டம் கூட்டமாக நடந்து கொண்டிருக்கிறார்கள்.
கால் முட்டு வலி என்ற டாக்டரிடம் போனால், முதலில் எடையை குறையுங்கள். அதற்காக தினமும் நடங்கள் என்று டாக்டர் சொல்கிறார், கொலஸ்ட்ரால் கூடிப் போனால் தினமும் நடங்கள் என்று டாக்டர் அறிவுரை கூறுகிறார். இப்படி மக்கள் தங்கள் இறுக்கத்தை குறைக்கவும், எடையை குறைக்கவும், ஆரோக்கியமாக இருக்கவும் தினமும் நடந்து வருகிறார்கள். செலவில்லாத, மற்ற எந்த உடற்பயிற்சியை காட்டிலும் சிறந்த பயிற்சியாக இந்த நடையை கூறுகிறார்கள். முதலில் நடையை மெதுவாக ஆரம்பித்து தினமும் கொஞ்ச கொஞ்சமாக அதிகப்படுத்தவது நல்லது என்றும்
, அதில் ஒவ்வொரு அடியும் முக்கியமானது என்றும் வைத்தியர்கள் கூறுகின்றனர். சிலர் தன்னோடு ஒரு நபரை கூட்டி நடக்கும்போது இன்னும் கொஞ்சம் அதிக தூரம் நடக்கலாம் என்று நினைக்கின்றனர்.
உலகப்பிரகாரமாக உடல் ஆராக்கியத்திற்கு நடப்பது எவ்வளவு முக்கியமோ, அதுபோல ஆவிக்குரிய ஆரோக்கியத்திற்கு தேவனோடு நாம் நடப்பது மிகவும் முக்கியம். நீங்கள் நினைக்கலாம், தேவனோடு நாம் நடப்பதா? அது எப்படி சாத்தியம் என்று. ஏனோக்கு தேவனோடு நடந்தார் என்று வேதம் கூறுகிறது. ஆங்கில வேதாகமத்தில் 'சஞ்சரித்து' என்ற வார்த்தைக்கு 'நடந்தார்' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அப்படியானால் தேவனோடு நாம் நெருங்கிய வளரும் உறவை வைத்து கொள்ள முடியும் என்பதற்கு இவர் ஒரு நல்ல உதாரணம். ஈனோக்கு ஒரு வருடம், இரண்டு வருடமல்ல,
300 வருடங்கள் நடந்தார் (ஆதியாகமம் 5:22) என்று வசனம் சொல்கிறது. ஏனோக்கின் நாளெல்லாம் 365 வருடங்கள்தான். அதில் 300 வருடங்;கள் அவர் தேவனோடு சஞ்சரித்து கொண்டிருந்து, முடிவில் தேவன் அவரை தம்மோடே என்றென்றும் வைத்து கொள்ளும்படி அவரை எடுத்து கொண்டபடியால் அவர் காணப்படாமற் போனார் என்று வேதத்தில் வாசிக்கிறோம். அப்படி அவர்கள் நடந்திருக்கும்போது தேவன் தம் இருதயத்தில் உள்ள எல்லா காரியங்களையும், அவரோடு கூட பகிர்ந்திருப்பார். தினமும் அவரோடு நடந்தபடியே எத்தனையோ காரியங்களை குறித்து அவரோடு கூட தேவன் பேசியிருந்திருப்பார். அவருடைய கொள்ளு பேரனுடைய அதாவது நோவாவின் காலத்தில் தாம் எப்படி வெள்ளத்தினால் இந்த உலகத்தை அழிக்க போகிறாரென்பதையும் கூட ஏனோக்கோடே கூட பகிர்ந்திருப்பார்.. மட்டுமல்ல விசுவாசிகளின் பட்டியல் அடங்கிய எபிரேயர் 11ம் அதிகாரத்தில் ஈனோக்கின் பெயரும் இருப்பதுமன்றி, அவர் தேவனுக்கு பிரியமானவரென்று சாட்சியும் தேவனால் பெற்றார் என்று வசனத்தில் பார்க்கிறோம். 'விசுவாசத்தினாலே ஏனோக்கு மரணத்தைக் காணாதபடிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டபடியினாலே
, அவன் காணப்படாமற்போனான்; அவன் தேவனுக்குப் பிரியமானவனென்று அவன் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்னமே சாட்சிபெற்றான்' (எபிரேயர் - 11:5)
காத்தரோடு நடப்பது என்பது, அவரோடு கூட ஒருமனப்படுவது. முன்பாகவோ பின்பாக தூரமாக செல்லாமல், அவரோடு கூட நடப்பதாகும். அவரோடு நடக்கும்போது, அவரோடு பேசும்போது, அவர் சொல்வதை கேட்கும்போது, அவருடைய பிரசன்னத்தை நாம் உணரும்போது, அது நமக்கு மிகுந்த சந்தோஷத்தை தரும். சீஷர்களில் இரண்டுபேர், இயேசுகிறிஸ்து மரித்து, உயிர்த்தபின், அதை அறியாதவர்களாக
, எருசலேமிலிருந்து, எம்மாவு என்ற ஊருக்கு சென்று கொண்டிருந்தார்கள். தேவனுடைய வீடாகிய எருசலேமிலிருந்து, தூரமாய் எம்மாவு என்ற ஊருக்கு சென்;றுகொண்டிருந்தார்கள். அப்போது இயேசு தாமே சேர்ந்து அவர்களுடனேகூட நடந்துபோனார். அப்படி நடக்கும்போது, அவர் இயேசு என்று அறியாதபடி அவர்கள் அவரோடு பேசி கெர்ண்டே நடந்து கொண்டிருந்தார்கள். 'அப்போது அவர் மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார். அத்தருணத்தில் தாங்கள் போகிற கிராமத்துக்குச் சமீபமானார்கள். அப்பொழுது அவர் அப்புறம் போகிறவர் போலக் காண்பித்தார். அவர்கள் அவரை நோக்கி: நீர் எங்களுடனே தங்கியிரும், சாயங்காலமாயிற்று, பொழுதும் போயிற்று, என்று அவரைவருந்திக் கேட்டுக்கொண்டார்கள். அப்பொழுது அவர் அவர்களுடனே தங்கும்படி உள்ளே போனார். அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு, அவரை அறிந்தார்கள். உடனே அவர் அவர்களுக்கு மறைந்துபோனார். அப்பொழுது அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி: வழியிலே அவர் நம்முடனே பேசி,
வேதவாக்கியங்களை நமக்கு விளங்கக்காட்டினபொழுது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா என்று சொல்லிக்கொண்டு, அந்நேரமே எழுந்திருந்து, எருசலேமுக்குத் திரும்பிப்போய்' (லூக்கா 26:27-33) சந்தோஷப்பட்டார்கள் என்று வாசிக்கிறோம். இயேசு நம்மோடு நடக்கும்போது, அவர் நமக்கு சொல்லி கொடுக்கும் காரியங்களால் நம் இருதயம் கொழுந்து விட்டு எரியும். யாரும் கொடுக்க முடியாத சந்தோஷத்தினால் சமாதானத்தினால் நம் இருதயம் நிரம்பும். அவரோடு நடக்கும் ஒவ்வொரு அடியும், நமக்கு திருப்பு முனையாக அமையும். அவரோடு நடக்கும்போது நம் வழிகள் சரியான பாதையில் செல்லும். பாவ வழியிலிருந்து தேவனுடைய வீட்டிற்கு கொண்டுபோய் சேர்க்கும். ஆமென் அல்லேலூயா!
கண்களை பதிய வைப்போம்
கர்த்தராம் இயேசுவின் மேல்
கடந்ததை மறந்திடுவோம்
தொடர்ந்து முன்செல்லுவோம்
சூழ்ந்து நிற்கும் சுமைகள்
நெருங்கி பற்றும் பாவங்கள்
உதறி தள்ளிவிட்டு
ஓடுவோம் உறுதியுடன்
ஜெபம்: எங்களை கரம்பிடித்து அனுதினமும் வழிநடத்தும் நல்ல தகப்பனே,
உம்மை துதிக்கிறோம். அனுதினமும் அப்படி நடக்கும் பாக்கியத்தை எங்களுக்கு தாரும் தகப்பனே. ஒரு ஏனோக்கைப்போல நாங்கள் உம்மோடு சஞ்சரிக்கும்படியாக, உம்மோடு உறவாடும்படியாக, எங்களுக்கு கிருபை தாரும். உம்முடைய இருதயத்தின் பாரங்களை அறிந்து உமக்கு சாட்சியாக நிற்கும்படியாக எங்கள் ஒவ்வொருவரையும் மாற்றும். உம்மோடு நடக்கும்போது, எங்களுக்கு நடக்க சொல்லி தருகிறீரே, உம்முடைய வார்த்தைகளால் எங்கள் இருதயங்களை கொழுந்து விட்டு எரியும்படியாக மாற்றுகிறீரே உமக்கு நன்றி. இந்த உலகத்தில் உம்மோடு கூட நடக்கிறவர்களாக, உமக்கு பின் செல்கிறவர்களாக பாவத்தை, சுமைகளை, எல்லாவற்றையும் உதறிவிட்டு பரிசுத்தமுள்ளவராகிய உம்மை பின்பற்றுகிறவர்களாக எங்களை மாற்றுவதற்காக உமக்கு ஸ்தோத்திரம். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும்
அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.

Wednesday – 06-01-2010 – குயவன் கையில்
06th January 2010 - Wednesday
ஜனவரி மாதம் 06-ம் தேதி – புதன் கிழமை
குயவன் கையில்
அவன் என்னுடைய நாமத்தினிமித்தம் எவ்வளவாய்ப் பாடுபடவேண்டுமென்பதை நான் அவனுக்குக் காண்பிப்பேன் என்றார். – (அப்போஸ்தலர் - 9:16).
சிலுவையை சுமக்காமல் கிரீடம் பெற விரும்புவதும், பாடுகள் இல்லாமல் பரலோகம் செல்ல விரும்புவதும் நமக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கிறது. இன்றைய தியான செய்தியில் தேவன் அவருடைய ஆவிக்குரிய பயிற்சி களத்தில் எவ்வாறு நம்மை பக்குவப்படுத்தி மெருகேற்ற விரும்புகிறார் என்பதை பார்ப்போம்.
வட அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவில் 'கூழாங்கற்கடற்கரை' என்று அழைக்கபடும் ஒரு கடற்கரை பகுதி உள்ளது. இக்கடலின் நீண்ட அலைகள் கரையில் வந்து மோதும் போது கடற்கரையிலுள்ள கூழாங்கற்கள் ஒன்றோடொன்று மோதி ஒரு பெரிய ஓசையை உண்டாக்குகிறது. மேலும் அலைகளின் கையில் அகப்பட்ட கற்கள் கடினமான பாறைகளின் மேல் உருட்டியடிக்கப்பட்டும், ஒன்றோடொன்று உரசியும் பளபளப்பாக்கப்படுகின்றன. இவ்வழகிய கற்களைக் காணவும், அதன் ஓசையை கேட்கவும் உலகெங்குமுள்ள சுற்றுலா பயணிகள் அங்கு வருவதுண்டு. இக்கற்களை எடுத்துச்சென்று தங்கள் வீடுகளின் அலங்கார பொருட்களுடன் வைத்து அலங்கரிப்பர். இக்கடற்கரையிலிருந்து சற்றுத் தொலைவிலும் பாதுகாப்பான இடத்தில் அநேக கற்கள் காணப்படுகின்றன. இவைகளுக்கு கடல் அலைகளின் மோதலோ, உராய்வுகளோ இல்லாததால் அழகற்று காணப்படுகிறது. சுற்றுலா பயணிகள் இதை விரும்புவதில்லை.
கடற்கரையின் இரண்டாவது பகுதியில் காணப்பட்ட கூழாங்கற்களைப் போல இன்றைக்கு நாம் பாதுகாப்பாக இருக்க விரும்புகிறோம். பாடுகளும், கஷ்டங்களும் வேண்டாம் என்கிறோம். யாருடைய கேள்விக்கோ, நிர்பந்தத்திற்கோ உட்படாமல் யாரும் நம்மேல் அதிகாரம் செலுத்துவதையும் விரும்பாமல் சுயாதீனமாக இருக்க ஆசைப்படுகிறோம். சொல்லப்போனால் சுகமாக, பாதுகாப்பாக இருப்பதையே அதிகம் விரும்புகிறோம். அதோடு எல்லோரும் என்னை கனம் பண்ணவேண்டும், மேன்மையான ஸ்தானத்தில் நான் வைக்கப்பட வேண்டுமென்ற (நப்) ஆசையும் இருக்கிறது.
பரிசுத்த வேதாகமத்தில் தேவன் பயன்படுத்திய மனுஷர்கள் அனைவரும் இக்கூழாங்கற்களைப் போல மிகவும் அலசடிபட்டவர்கள் தான். எகிப்தின் பிரதான தலைவனாக உயர்த்தப்படும் முன்பு அவன் அனுபவித்தப் பாடுகளை வேதம் நமக்கு ஒரு சரித்திரமாகவே கூறியுள்ளது. அதுபோலவே அப். பவுலைக் குறித்து தேவன் கூறும்போது 'என் நாமத்திற்காக எவ்வளவாய் பாடுபடவேண்டும்' என குறிப்பிட்டு பேசினார். ஆம் இந்த செய்தியின் மூலம் தேவன் உங்களை மீண்டும் அழைக்கிறார். தேவ சித்தத்தை விட்டு வழி விலகி உலகத்தோடு சுகமாக வாழ்ந்து கொண்டிருக்கும் உங்களைத் தான் தேவன் அழைக்கிறார். குயவனாகிய என்னிடம் உன்னைக் கொடுத்தால் நான் உன்னை எனக்கேற்ற பாத்திரமாக வனைந்து உன்னை சிறந்திருக்கப்பண்ணுவேன் என்று தேவன் கூறுகிறார். இவ்வார்த்தைகளை நம்பி தேவனுக்காக பாடுபட ஆயத்தம் என ஒரு அடி நீங்கள் எடுத்துவைக்க முன்வந்தால், உங்களுக்கு உதவி செய்யும்படி தேவன் இரண்டு அடி முன்வருவது நிச்சயம். ஆமென்! அல்லேலுயா!
குயவனே குயவனே
படைப்பின் காரணனே
களிமண்ணான என்னையுமே
கண்ணோக்கிப் பார்த்திடுமே
ஜெபம்: எங்களை அளவில்லாமல் நேசிக்கிற நல்ல தகப்பனே, நீர் கொடுத்த இந்த நாளுக்காக உமக்கு ஸ்தோத்திரம். நாங்கள் எங்களை உம்முடைய கைகளிலே தருகிறோம். எங்களை உமக்கு உகந்த பாத்திரமாக வனைந்து உமக்கென்று வாழவும் உம்முடைய நாமத்தை எடுத்து சொல்லும் பாத்திரமாக மாற்றும். நாங்கள் உம்மையே நம்பி இருக்கிறோம். எங்களை உம்முடைய பாதபடியில் தாழ்த்தி ஒப்படைக்கிறோம். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

Tuesday – 05-01-2010 – தேவனின் அழைப்பு
05th January 2010 - Tuesday
ஜனவரி மாதம் 05-ம் தேதி – செவ்வாய் கிழமை
தேவனின் அழைப்பு
பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே, என்னை நோக்கிப்பாருங்கள்; அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை.
- (ஏசாயா 45:22).
1850 ஜனவரி 6ஆம் தேதி இங்கிலாந்து பனிப்புயலால் பாதிக்கப்பட்டது. புனிப்புயலில் சிக்கிய வாலிபனொருவன் தன்னை காத்துக் கொள்ள அருகிலிருந்த ஆலயத்திற்குள் ஓடினான். அங்கு மாலை ஆராதனை நடந்து கொண்டிருநதது. அன்று போதகர் இல்லாததால் சபை அங்கத்தினரான தையல்காரர் ஒருவர் ஆராதனையை நடத்தி கொண்டிருந்தார். அவர் செய்தியளிக்க ஆரம்பித்தார். அவர் திரும்ப திரும்ப வலியுறுத்தி சொன்ன காரியம், 'என்னை நோக்கி பாருங்கள் அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்' என்பதே. பனிப்புயலுக்கு தப்ப ஓடி வந்த வாலிபன் கதவுக்கு பின்புறமாக நின்று கொண்டிருந்தான். அவனுக்கு செய்தியை கேட்க எந்த விருப்பமும் இல்லை.
தையல்காரர் பிரசங்க பீடத்தில் நின்ற வண்ணமாகவே அந்த வாலிபனை நோக்கி, 'வாலிபனே இயேசுவை நோக்கிப்பார்' என்று கூறினார். அவர் படித்தவருமல்ல, பிரசங்கியாருமல்ல, மிக சாதாரண மனிதர்தான். ஆனால் பரிசுத்த ஆவியில் நிறைந்தவராய் வல்லமையோடு அசாதாரணமாக பிரசங்கித்தார். அநேகர் இருந்த அந்த இடத்தில் குறிப்பாய் தன்னை பார்த்து சொன்ன அந்த செய்தி அந்த வாலிபனை வெகுவாய் அசைத்தது. இயேசுவை நோக்கி பார் என்ற சத்தம் அவனுடைய இருதயத்தில் தொனித்து கொண்டே இருந்தது. முடிவில் அவன் இயேசுவை நோக்கினான். பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டான். அந்த வாலிபன் யார் தெரியுமா? அவர்தான் C. H. ஸ்பர்ஜன். (C. H. Spurgeon) பின் நாட்களில் பிரசங்க ஊழியத்தில் தேவனால் மிகவும் வல்லமையாக பயன்படுத்தப்பட்டு புகழ்பெற்று விளங்கினார்.
படிப்பறிவில்லாத தையல்காரரை கொண்டு தேவன் தேசத்திற்கு மிகப்பெரிய ஊழியராகிய ஸ்பர்ஜனை எழுப்பினார். அதுபோல இயேசுவோடு ஊழியம் செய்த அவருடைய சீஷர்களில் அநேகர் படிப்பறிவற்ற மீனவர்களே. தேவன் தனது பணியினை செய்ய திறமையுள்ளவர்கள் அனுபவமிக்கவர்கள் இவர்களை மட்டும் தெரிந்தெடுப்பதில்லை. தாழ்ந்த சிந்தையும், உண்மையான இருதயமும் உள்ள சாதாரண மக்களையே தேடுகிறார். ஆம் அசாதாரணமானவைகளை செய்ய தேவனுக்கு சாதாரணமானவர்களே தேவை.
உதாரணத்திற்கு எங்களையே எடுத்து கொள்ளுங்கள், நாங்கள் பெரிய போதகரின் படிப்பு பெற்றவர்களோ, பட்டம் பெற்றவர்களோ இல்லை. மிகவும் சாதாரணமானவர்களே! அநேகர் எங்களுடைய விலாசத்தை கேட்டு எழுதி வருகிறார்கள். ஆனால் எங்களுக்கு எந்தவித அறிமுகமும் வேண்டாம் என்றும், கர்த்தருடைய வார்த்தை உலக தமிழ் மக்களுக்கு கடந்து செல்ல வேண்டும் என்று ஒரே நோக்கத்துடன் இந்த ஊழியத்தை செய்து வருகிறோம்.
ஒரு நல்ல ஆவிக்குரிய சபையில் பல ஆண்டுகளாக, நல்ல மேய்ப்பரின் கீழ் இருந்து, கர்த்தருடைய வார்த்தைகளை கற்று கொண்டு (எல்லாவற்றையும் கற்று கொண்டு விட்டோம் என்று ஒரு போதும் நினைக்கிறதில்லை, கற்றது கைமண்ணளவு, கல்லாதது உலகளவு) தேவனுக்கு ஏதாவது ஒரு வகையில் ஊழியம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு ஒரு குழுவாக, ஒரு குடும்பமாக தேவன் எங்களுக்கு கற்றுக் கொடுத்ததை உஙகளோடுகூட பகிர்ந்து கொள்கிறோம். 'எப்படியெனில், சகோதரரே, நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பைப் பாருங்கள்; மாம்சத்தின்படி ஞானிகள் அநேகரில்லை, வல்லவர்கள் அநேகரில்லை, பிரபுக்கள் அநேகரில்லை. ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்' (1கொரிந்தியர் 1:26,27) என்ற வார்த்தையின்படி, கர்த்தர் ஒன்றுமில்லாத எங்களையும் தமது மகத்துவமான ஊழியத்தை செய்யும்படி தெரிந்து கொண்டார். அவருடைய அதிசயமான நாமத்திற்கே மகிமை உண்டாவதாக. நாங்கள் உலக வேலை செய்து கொண்டே இந்த ஊழியத்தையும் செய்கிறோம். அதற்காக எங்களுக்காகவும் ஜெபித்து கொள்ளுங்கள்.
நம்மில் அநேகர் 'கர்த்தருடைய ஊழியத்தை செய்ய எனக்கு எந்த தகுதியும் இல்லை' என்று பின்வாங்குகிறோம். முன் வாருங்கள். பேச வேண்டிய வார்த்தையை அவர் உங்கள் வாயில் வைப்பார். நீங்கள் 'முடிவு வரை தேவனை மட்டுமே நோக்கி பார்ப்பேன்'; என்ற உறுதி எடுங்கள். வழியில் வரும் உலகத்தையோ, பணத்தையோ, பெயரையோ, முதன்மையான இடத்தையோ நோக்காமல் கர்த்தரை மாத்திரம் நோக்கி பார்த்து, அவருடைய ஊழியத்தை உண்மையாய் செய்யுங்கள். உண்மையான மனத்தாழ்மையை மட்டுமே முதலீடாக கொண்டு நீங்கள் கர்த்தருக்கு ஊழியம் செய்யும் போது, கர்த்தர் உங்களை கொண்டும் பெரிய காரியங்களை செய்ய முடியும். தேவன் நமக்கு கொடுக்கும் வாய்ப்புகளை தேவ நாம மகிமைக்காக பயன்படுத்தி கொள்ள வேண்டும். கர்த்தருக்கென்று இந்த கடைசி நாட்களில் பெரிய காரியங்களை செய்வோம். கர்த்தர் நாமம் மகிமைப்படட்டும். ஆமென் அல்லேலூயா!
இந்நாட்களில் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்படும் ஒவ்வொருவரும் கர்த்தருக்கென்று ஏதாவது செய்யும்போதுதான் நம் தேசம் சந்திக்கப்படும், மாயையை நம்பியிருக்கிற மக்கள் இருளிலிருந்து வெளிச்சமாகிய இயேசுவினிடத்தில் வர முடியும். ஒன்றாக இணைவோம். தேசத்தை கர்த்தருக்கு சொந்தமாக்குவோம்.
காரிருள் நம்மை சூழ்ந்தாலும்
கர்த்தர் ஒளியாவார்
ஒளியாய் எழும்பி சுடர்விடுவோம்
உலகின் ஒளி நாமே
ஜெபம்: எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, இந்த அருமையான நாளுக்காக உம்மை துதிக்கிறோம். ஓன்றுமில்லாதவர்களையும், பலவீனமானவர்களையும் தெரிந்து கொண்டு அவர்களை உம்முடைய ஊழியத்தை செய்ய போதிக்கிறீரே உமக்கு ஸ்தோத்திரம். ஒவ்வொருவர் வாழ்விலும் நீர் கொடுக்கும் அழைப்பிற்காக உமக்கு ஸ்தோத்திரம். தாங்கள் இருக்கும் இடங்களில்; உமக்கென்று உழைக்க உமக்கென்று ஊழியம் செய்ய அவர்களை தகுதிபடுத்தும், ஞானத்தினால் நிரப்பும். தேவனுடைய அழைப்பும், அவருடைய கிருபை வரங்களும் மாறாதவைகளாய் இருப்பதால், அந்த அழைப்பை உணர்ந்து உமக்கென்று எழும்பி பிரகாசிக்க கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

Monday – 04-01-2010 – பரிகாரியாகிய கர்த்தர்
ஜனவரி மாதம் 04-ம் தேதி – திங்கள் கிழமை
பரிகாரியாகிய கர்த்தர்
நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்;
நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார். - (யாத்திராகமம் 15:26).
அனுதின மன்னா வாசகர்கள் ஒவ்வொருவருக்கும், எங்கள் குடும்பங்களின் சார்பாக எங்களது புத்தாண்டு வாழ்த்துக்களை உங்களுக்கு தெரிவித்து கொள்கிறோம். கர்த்தர் இந்த புதிய ஆண்டை ஒரு ஆசீர்வாதமான ஆண்டாக உங்களுக்கு அமைய எங்கள் உள்ளத்தின் ஆழத்திலிருந்து உங்களை வாழ்த்துகிறோம்.
கடந்த வருடம் முழுவதும் எபினேசராக இம்மட்டும் உதவி செய்த தேவன் இந்த வருடத்திலும் யெகோவாயீரேயாக இருந்து, நமது தேவைகளை சநதிக்க வல்லவராகவே இருக்கிறார்.
பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன் (3யோவான்
1:2) என்ற வசனத்தின்படி நீங்கள் எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி தேவன் கிருபை செய்வாராக!
இந்த வருடத்தின் வாக்குதத்தமாக நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்று தேவன் எங்கள் சபைக்கு கொடுத்தார். அதையே அனுதினமன்னாவின் வாக்குதத்தமாக நாம் எடுத்து கொள்வோம். உலக பிரகாரமாக ஒவ்வொரு வியாதிக்கும் ஒவ்வொரு ஸ்பெஷலிஸ்ட் இருப்பார்கள். ஆனால் எல்லா வியாதிக்கும், எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரே ஒரு பரிகாரி நம் இயேசுவே. நான் உன் பரிகாரியாகிய கர்த்தர் என்று சொல்லாமல், நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்று ஒரு ஏகாரத்தை அந்த இடத்தில் வைத்து கர்த்தர் சொல்வதன் மூலம் நமக்கு வேறு ஒரு பரிகாரி இல்லாதபடி, அவரே நமக்கு பரிகாரியாக இருக்கிறார்.
சமீபத்தில் செய்திதாளில் வந்த ஒரு செய்தி எல்லாரையும் திடுக்கிட வைத்தது. ஒரு மனிதன் ஒரு ஜோதிடனிடம் போய் தன் எதிர்காலத்தை குறித்து கேட்ட போது, அந்த ஜோதிடன், சொன்னானாம், உனக்கு இந்த பிரச்சனை இருக்கிறது என்று. உடனே இந்த மனிதன்,
அதற்கு பரிகாரம் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டபோது, அந்த ஜோதிடன் சொன்னானாம், உனக்கு பிறந்த குழந்தையை நீ கொல்ல வேண்டும் அப்போது தான் உன் பிரச்சனை தீரும் என்று. அப்போது அதை நம்பிய அந்த முட்டாள் மனிதன், தன் சொந்த பிள்ளையை கொல்ல வகை தேடினான். அதை அறிந்த மனைவி, அந்த பிள்ளையை பத்திரமாக பாதுகாத்தாள். ஆனால், ஒரு நாள், அந்த பிள்ளையை கணவன் இல்லாத நேரத்தில், தனியே விட்டுவிட்டு, பக்கத்தில் கடைக்கு சென்று ஏதோ வாங்க போனாள். அப்போது வீட்டிற்குள் வந்த அந்த கண்வன், அந்த குழந்தையை ஆட்டாங்கல் எடுத்து, தலையில் அடித்து கொன்றான். அந்த நேரத்தில் வந்த மனைவி, நடந்ததை அறிந்து துடித்தாள்
, அந்த பிள்ளை அந்த இடத்திலேயே மரித்தது. அந்த கணவன் இன்றும் சிறையில் இருக்கிறான். இது ஒரு உண்மை சம்பவம். அவன் தன் பிரச்சனைக்கு ஒரு தீர்வை எதிர்பார்த்தான். ஆனால் அவனுடைய வாழ்வே ஒரு பிரச்சனையாக மாறி விட்டது.
உலகத்தின் பரிகாரங்கள் நம்மை துன்பப்பட வைக்கும். துயரப்பட வைக்கும். பரிகாரங்கள் என்று எதுவுமே இல்லை. அவை அந்த தெயவங்களை திருப்தி செய்ய வைக்குமே தவிர உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வை கொண்டு வராது. சிலர் இந்த வருடம் எனக்கு எப்படி இருக்கும் என்று ஜோதிடரிடம் போய் தங்கள் கைளை காட்டி, பார்க்கிறார்கள். ஹொராஸ்கோப் ( horoscope ) எப்படி இருக்கிறது என்பதை அறிய அதிக ஆவல். தொலை காட்சிகளிலும் இந்த வருடம் எப்படி இருக்கும் என்று நட்சத்திரங்களை வைத்து, சொல்லுகிறார்கள். இது தேவனுக்கு மிகவும் அருவருப்பானது. தயவுசெய்து அனுதின மன்னா வாசகர்கள் யாரும் இப்படி பார்க்க வேண்டாம் என்று உங்களை வேண்டிக்கொள்கிறேன்.
நமது எந்த பிரச்சனைகளுக்கும் பரிகாரியாக நம் தேவன் இருக்கும்போது நாம் எதை குறித்தும் கவலைப்பட வேண்டியதில்லை. அவர் சொல்கிறார், நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு
, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன் என்று கூறுகிறார். கர்த்தருடைய அசீர்வாதங்கள் எல்லாமே ஒரு நிபந்தனையின் பேரில்தான் இருக்கும். நாம் அவருடைய பார்வைக்கு செம்மையானதை செய்யும்போது, அவருடைய நியமங்களை கைகொள்ளும்போது, அவர் நிச்சயமாகவே நம் பரிகாரியாக இருந்து நம் தேவைகளை சந்திப்பார். அவர் நமது வியாதிகளுக்கு மாத்திரமல்ல, நம் கடன் பிரச்சனைகளுக்கும், நம் குடும்ப பிரச்சனைகளுக்கும், நம் வேலையிடத்தில் காணப்படும் பிரச்சனைகளுக்கும், நம் எல்லா பிரச்சனைகள், தேவைகளுக்கும் அவரே நமக்கு பரிகாரியாக இருக்கபோகிறார். நாம் விசுவாசிப்போம். வாக்குதத்தத்தை சுதந்தரித்து கொள்வோம். கர்த்தர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக!
இயேசு என் பரிகாரி - இன்ப
இயேசு என் பரிகாரி
என் ஜீவிய நாட்களெல்லாம்
இன்ப ராஜா என் பரிகாரி
பண கஷ்டங்கள் வந்தாலும்
மன கஷ்டங்கள் நேர்ந்தாலும்
ஜனம் என்னை வெறுத்தாலும்
இன்ப ராஜா என் பரிகாரி
ஜெபம்: எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் எங்கள் நல்ல தகப்பனே, கடந்த வருடம் முழுவதும் எங்களை கண்ணின் மணியை போல காத்து கொண்டீரே உமக்கு நன்றி. இந்த புதிய வருடத்தை காண கிருபை செய்தீரே உமக்கு நன்றி. இந்த வருடத்திலும் நீர் எங்களுக்கு பரிகாரியான கர்த்தர் என்று கொடுத்த வாக்குதத்த்திற்காக கோடி ஸ்தோத்திரங்கள் தகப்பனே. நாங்கள் எங்கள் எல்லா வழிகளிலும் உமக்கு பிரியமானதை செய்யும்போது நீர் எங்கள் பரிகாரியாக இருக்க போகிற தயவிற்காக உமக்கு நன்றி. அனுதின மன்னா வாசகர்கள் ஒவ்வொருவரையும் அவர்கள் குடும்பத்தையும் நீர் ஆசீர்வதிப்பீராக. அவர்களுடைய இருதய வாஞ்சைகளை அறிந்திருக்கிற தேவன், அவற்றை நிறைவேற்றுவீராக. இந்த வருடம் அவர்களுக்கு ஆசீர்வாதமானதாகவும், உம்மைண்டை இன்னும் நெருங்கி ஜீவிக்கிற வருடமாகவும் இருக்க உதவி செய்வீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

Subscribe to:
Posts (Atom)